Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்: முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் தூத்துக்குடி–திண்டுக்கல் அணிகள் மோதல்

தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்: முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் தூத்துக்குடி–திண்டுக்கல் அணிகள் இன்று மோதல் தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக...

தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட்: முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் தூத்துக்குடி–திண்டுக்கல் அணிகள் இன்று மோதல்

தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் முதலாவது அரைஇறுதியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்– திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. லீக் சுற்று முடிவடைந்த நிலையில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (10 புள்ளி), திண்டுக்கல் டிராகன்ஸ் (10 புள்ளி), தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் (8 புள்ளி), கோவை கிங்ஸ் (8 புள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளன.

காரைக்குடி காளை (8 புள்ளி), திருவள்ளூர் வீரன்ஸ் (8 புள்ளி), காஞ்சி வாரியர்ஸ் (4 புள்ளி), மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் (0) ஆகிய அணிகள் வெளியேறின. இதில் மதுரை அணி ஒரு வெற்றி கூட பெற முடியாமல் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது.

கோவை கிங்ஸ் அணியை பொறுத்தவரை காரைக்குடி காளையை விட மயிரிழையில் ரன்ரேட்டில் முந்தியதால் வெளியேறும் ஆபத்தில் இருந்து தப்பி பிழைத்தது. இப்படி தட்டுத்தடுமாறி அரைஇறுதிக்கு வந்த கோவை கிங்ஸ் அணியை பற்றி இன்னொரு ஆச்சரியமான விஷயம் உண்டு. அதாவது அரைஇறுதிக்குள் நுழைந்துள்ள மற்ற மூன்று அணிகளையும் லீக்கில் வீழ்த்திய ஒரே அணி கோவை கிங்ஸ் தான். இன்னும் மூன்று ஆட்டங்களின் முடிவில் டி.என்.பி.எல். தொடரின் முதல் சாம்பியன் யார் என்பது தெரிந்து விடும்.

இந்த நிலையில் நெல்லை சங்கர் நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை அரங்கேறும் முதலாவது அரைஇறுதியில் புள்ளி பட்டியலில் 2–வது இடத்தை பிடித்த திண்டுக்கல் டிராகன்சும், 3–வது இடத்தை பெற்ற தூத்துக்குடி பேட்ரியாட்சும் மோதுகின்றன. இதையொட்டி இவ்விரு அணிகளும் தீவிர பயிற்சியுடன் புதிய யுக்திகளை தீட்டி வருகின்றன. கம்பீரமாக பயணத்தை தொடங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி லீக்கில் 5 ஆட்டங்களில் வெற்றியும், இரண்டில் தோல்வியும் (சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் கோவை கிங்சுக்கு எதிராக) தழுவியது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்