Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

Science Info

பூமி தோன்றியது எப்போது? இந்தக் கேள்விக்கு இதுவரை துல்லியமான விடை கிடைத்த பாடில்லை. இருந்தாலும், பல விஞ்ஞானிகளும் தோராயமாக பூமி தோற்றம் குறித...

பூமி தோன்றியது எப்போது?

இந்தக் கேள்விக்கு இதுவரை துல்லியமான விடை கிடைத்த பாடில்லை. இருந்தாலும், பல விஞ்ஞானிகளும் தோராயமாக பூமி தோற்றம் குறித்த கருத்துகளை பல காலகட்டங்களில் தெரிவித் திருக்கிறார்கள். புதிதாக இப்போது கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பூமியின் தோற்றம் குறித்து ஆய்வு செய்து ஒரு முடிவை வெளியிட்டிருக்கிறார்கள். பூமி தோன்றி 500 கோடி ஆண்டுகள் ஆகியிருக்கும் என்பதுதான் இவர்கள் வெளியிட்டிருக்கும் லேட்டஸ்ட் முடிவு. அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்பட்ட மாற்றங்களைக் கொண்டு இதை யூகித்திருக்கிறார்கள் இவர்கள்!

அந்த ஆய்வு முடிவின் சிறப்பம்சங்கள் சில..

‘பூமி தோன்றிய உடனே அதில் உயிரினங்கள் தோன்றி விடவில்லை. பூமி தோன்றி பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகே உயிரினங்கள் தோன்றியிருக்க முடியும். எடுத்த உடனேயே இப்போது உள்ளது போலவே உயிரினங்கள் தோன்றவில்லை. சுமார் 100 ஆண்டுகள் கழித்து முதன்முதலாக கடல் நீரில் பாசி போன்றவை தோன்றின. அக்காலத்தில் கார்பன் கூட்டுப் பொருட்கள் அதிகமாக இருந்ததால், பாசி தோன்றியிருக்கக் கூடும்.

இதன்பிறகு 50 கோடி ஆண்டுகள் கடந்தபிறகுதான் உயிரினங்கள் தோற்றம் பெறத் தொடங்கின. அதுவும்கூட பலவித மாறுதல்களை அடைந்தன. கிளிஞ்சல்கள் போன்ற திடமான கூடுகளில் உயிரினங்கள் வசிக்க ஆரம்பித்தன. இதன்பிறகு 50 கோடி ஆண்டுகள் கழித்து படிப்படியாக சில உயிரினங்கள் தோன்றி வளர ஆரம்பித்தன..

இப்படிப் போகிறது கலிபோர்னியா விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவு. முழுமையான விவரங்கள் தெரிய இன்னும் சில ஆய்வுகள் செய்ய வேண்டியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.



நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை!


`ஞாபகம் வருதே… ஞாபகம் வருதே…’ என்று பாடுவது மிகவும் சுலபம். ஆனால், சில பல நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வையோ அல்லது செய்த செயலையோ சரியாக நினைவில் வைத்திருந்து சொல்வது மிகவும் கடினமான ஒன்று. இது ஞாபக மறதிக்காரர்களுக்கு நன்றாகவே தெரியும்.
ஆனால், ஒரு சிலர் இருக்கிறார்கள், முப்பது நாப்பது வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயங்களை இப்போது கேட்டாலும் மிக துல்லியமாக நினைவு கூர்ந்து இம்மி பிசகாமல் அப்படியே விவரிப்பார்கள். இது நமக்கு பிரமிப்பாக இருக்கும்.
`உண்மையில் எவ்வளவு விஷயங்களை நம்மால் நினைவில் வைத்துக்கொள்ள முடிகிறது என்பதில் பெரிய விசேஷம் ஒன்றுமில்லை. ஆனால், குறிப்பிட்ட ஒரு விஷயத்தை சரியாக நினைவு கூர்ந்து எப்படி சொல்ல முடிகிறது என்பதுதான் எனக்கு மிகவும் பிரமிப்பாக இருக்கிறது’ என்கிறார் அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக ஆய்வாளர் பிரைஸ் குல்.
பழைய நினைவுகளுக்கும் புதிய நினைவுகளுக்கும் இடையில் நடக்கும் போட்டிதான் `நினைவுத்திறன்’ என்கிறது அறிவியல். நினைவுத்திறன் குறித்த முழு புரிதல் மற்றும் நினைவுத்திறன் குறைபாட்டினால் ஏற்படும் மூளைக் கோளாறுகள் குறித்து ஆய்வுகள் செய்யும் குல், புதிய நினைவுகளுக்கும் பழைய நினைவுகளுக்கும் இடையிலான போட்டியை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுக்காக, குல் மற்றும் அவருடைய ஆய்வுக் குழுவினர் 24 இளங்கலை மாணவர்களைத் தேர்வு செய்து, அவர்களிடம் `ஒரு புகைப்படம் மற்றும் ஒரு வார்த்தை’ சேர்ந்த பல இணைகளை கொடுத்து அவற்றை வரிசையாக நினைவில் வைத்துக்கொள்ளச் சொன்னார்கள். அதன் பிறகு, கடைசியாக கொடுக்கப்பட்ட புகைப்படம், வார்த்தை இணை குறித்து விவரிக்கச் சொன்னார்கள். மாணவர் களுக்கு ஒரு நினைவை உருவாக்க, ஒரு முகம் அல்லது ஒரு பொருள் அல்லது ஒரு காட்சி, இவற்றுக்கு மேலே ஒரு சம்பந்தமில்லாத வார்த்தையை காண்பித்து நினைவில் வைத்துக்கொள்ளச் சொன்னார்கள்.
உதாரணமாக, அமெரிக்க அரசியல்வாதி `அல் கோரே’வின் புகைப்படத்துக்கு மேலே `நீச்சல்’ எனும் ஒரு வார்த்தை காண்பிக்கப்பட்டது (இது பழைய நினைவு).அதன்பிறகு, நீச்சல் எனும் வார்த்தைக்கு கீழே உள்ள அல் கோரேவின் புகைப்படத்தை நீக்கிவிட்டு அங்கு `க்ராண்ட் கேன்யான்’ (Grand Canyon) எனும் பிரபல இடத்தின் புகைப்படம்/காட்சியை வைத்து நினைவு வைத்துக்கொள்ளச் சொன்னார்கள் (இது புதிய நினைவு). அதன்பிறகு, மூளையை ஸ்கேன் செய்யும் ஒரு ஸ்கேனருடன் மாணவர்களை இணைத்துவிட்டு, நீச்சல் எனும் வார்த்தையை அவர் களுக்கு காண்பித்து அதற்கு கீழே புதிய நினைவில் என்ன புகைப்படம் இருந்தது என்று கேட்டார்கள். மூளையின் குறிப்பிட்ட பாகங்கள் வெவ்வேறு வகையான புகைப்படங்களுக்கு (முகம்/காட்சி/பொருள்) ஏற்றவாறு எதிர்வினை செய்யக் கூடியவை. மூளை ஸ்கேன் தகவல்களை அடிப்படையாக வைத்து, ஒருவர் ஒரு முகத்தை அல்லது ஒரு காட்சியை அல்லது ஒரு பொருளை பார்க்கிறாரா என்பதை அறிய முடியும். மேலும் இந்த விவரத்திலிருந்து ஒருவருடைய புதிய மற்றும் பழைய நினைவுகளின் உறுதியை வரையறுத்துச் சொல்ல முடியும் என்கிறார் குல்.
இந்தப் பரிசோதனையில், ஒருவருடைய பழைய நினைவு தொடர்பான மூளைச் செயல்பாடு அதிகரித்தபோது அவரால் புதிய நினைவை சரியாக நினைவில் வைத்துக்கொள்ள இயலவில்லை என்பது தெரியவந்தது. மேலும், ஒருவர் புதிய நினைவை சரியாக ஞாபகம் வைத்துச் சொன்னபோதும் அவருடைய பழைய நினைவு இடையில் வந்து குறுக்கிட்டது கண்டறியப்பட்டது.
ஒருவருடைய பழைய மற்றும் புதிய நினைவு ஆகிய இரண்டின் உறுதியும் சமமாக இருந்தபோது, அவர்கள் ஞாபகம் குறித்த கேள்விக்கான பதிலைச் சொல்ல நிறைய நேரம் எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஒருவர் தேவையில்லாத ஒரு விஷயத்தை மறக்க முயற்சி செய்கிறார்கள்.
புதிய நினைவுகளை ஞாபகம் வைத்துக்கொள்ள முயற்சிக்கும்போது, தேவையில்லாத பழைய நினைவுகள் குறுக்கீடு செய்து நினைவுத் திறன் குறைபாடுகளை உருவாக்குகின்றனவா என்கிற சந்தேகம் விஞ்ஞானிகளுக்கு நீண்டகாலமாக இருந்து வருகிறது என்கிறார் பிரவுன் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் ஆய்வாளர் டேவிட் பாத்ரே. ஆனால், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த புதிய ஆய்வு முறையின் மூலம் இந்த நினைவுத் திறன் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண முடியும் என்கிறார் பாத்ரே.
நினைவுத் திறன் குறைபாடுகள் இல்லாத, ஆரோக்கியமான இளங்கலை மாணவர்கள் மீதான இந்த ஆய்வு முறையை பயன்படுத்தி, நினைவுத் திறன் குறைபாடுள்ளவர்களின் மூளையில் என்ன நடக்கிறது என்பதை ஆய்வு செய்து அறிந்துகொள்ள முடியும். அதன்மூலம் நினைவுத் திறன் குறைபாடுகளுக்கான ஒரு தீர்வை கண்டறிந்துவிட முடியும் என்பது ஆய்வாளர் குல்லின் நம்பிக்கை. நம்பிக்கைதானே வாழ்க்கை? குல்லின் ஆய்வு முயற்சிகள் விரைவில் வெற்றி பெறட்டும்.

இட்லி, தோசை சுட இயந்திரம்!
அரிசியும் உளுந்தையும் ஊற வைத்து, ஆட்டுரலில் அரைத்து காலையில் தோசையோ, இட்டிலியோ சுடுவது ரொம்ப கடினமாய் இருக்கிறதே என நினைப்பவர்களுக்காகத் தோன்றியவை தான் தெருவோர மாவு விற்பனை நிலையங்கள்.
காலையில் போனோமா, ஒரு கவர் மாவு வாங்கினோமா தோசை சுட்டோமா தின்றோமா சென்றோமா என உருமாறி விட்டது வாழ்க்கை.
இந்தத் தோசையைக் கூட ஒரு இயந்திரம் சுட்டுத் தந்தால் நன்றாக இருக்குமே என நினைக்கிறீர்களா ? அதற்கும் இயந்திரங்கள் இருக்கின்றன ! உண்மை தான் விளையாட்டு இல்லை !
மாவைப் போட்டால் இட்டிலி சுடலாம், தோசை சுடலாம், சப்பாத்தி சுடலாம், சமோசா செய்யலாம் அப்படி பல்வேறு இயந்திரங்கள் உள்ளன. அதுவும் நமது இந்தியத் திரு நாட்டில்.

CFRTI எனப்படும் நடுவண் உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் கண்டுபிடிப்புகள் இவையெல்லாம் . எல்லாவற்றுக்கும் உஷாராய் காப்புரிமையும் வாங்கி வைத்தாயிற்று.

ஒரு மணி நேரத்துக்கு எண்ணூறு இட்டிலி, எண்ணூறு சப்பாத்தி என இந்த இயந்திரங்கள் நல்ல சுவையாக உணவுகளை தயாரித்துத் தள்ளுகின்றன.
இப்படி இயந்திரங்கள் எல்லாம் எதுக்கு ? பேசாம கொஞ்சம் கொஞ்சமாய் சுட்டு தேவைக்கேற்ப பரிமாற வேண்டியது தானே எனும் உங்களுடைய எண்ணம் தவறில்லை. ஆனால் இப்படி ஒரு சூழல் நினைத்துப் பாருங்கள்.
ஒரு மாவட்டத்தில் ஒரு நிலநடுக்கம், அல்லது வெள்ள அபாயம் நேர்ந்து விடுகிறது ஆயிரக்கணக்கான மக்கள் தனியே பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். அனைவருக்கும் உணவு வழங்க வேண்டும். எத்தனை பேர் எத்தனை மணி நேரம் தயாரிப்பது ? இந்த இயந்திரம் இருந்தால் போதும் சட்டென அனைவருக்கும் தேவையான உணவு கிடைத்து விடும்.
இந்த இயந்திரங்களை அடிக்கடி பரிசீலனை செய்து நவீனப்படுத்தவும் செய்கின்றனர். இப்போது தோசையுடன் கூடவே சட்னியும் தயாராக்குகின்றன இயந்திரங்கள்.

காலப்போக்கில் சின்ன இயந்திரங்கள் வரக் கூடும், அவை நமது சமையலறைகளில் இடம் பிடிக்கக் கூடும்.



மனிதனின் மூதாதையார் இதோ….
Fossil
 ஆதாம், பிரம்மா என மதங்கள் முதல் மனிதனின் தோற்றம் குறித்து பல்வேறு தகவல்களைச் சொல்லிக் கொண்டிருந்தாலும் விஞ்ஞானம் அதையெல்லாம் நம்பத் தயாராய் இல்லை.
குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் என்பதையே விஞ்ஞானம் பொதுவாக ஏற்கிறது. எனில் குரங்குகள் எங்கிருந்து வந்தன ? அதன் மூதாதையார் யார் என எழுப்பப்படும் கேள்விகளுக்கு விடையாய் இருக்கக் கூடும் என நம்பப்படுகிறது இந்த உலர் எலும்புக் கூடு.
இந்த உயிரி வாழ்ந்த காலம் சுமார் 4.7 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது எனும் செய்தி வியப்பூட்டுகிறது. குரங்குகள், மனிதன் போன்ற அனைத்துக்குமே முன்னோடியாக இருக்கக் கூடும் இந்த உயிரி என்பதே விஞ்ஞானிகளின் நம்பிக்கை. உலகிலுள்ள உயிரிகள் இரண்டு மாபெரும் பிரிவாகப் பிரிந்து ஒரு பிரிவு குரங்கு, மனிதன் என மாறியது, இன்னொரு பிரிவு லெமூரியர்கள், இதர ராட்சத விலங்குகள் என மாறியது. இந்த உயிரி அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என விஞ்ஞான பாஷை பேசுகின்றனர் விஞ்ஞானிகள்.
இந்த எலும்புக் கூடு ஒரு பெண் உயிரியின் எலும்புக் கூடு எனவும், இதற்கு மனிதர்களுடைய இயல்புகள் பல இருந்திருக்க வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த எலும்புக் கூடைக் கொண்டு மனிதர்களுக்கும் பிற உயிரிகளுக்கும் இடையேயான தொடர்பை இந்த எலும்புக் கூடு விளக்கும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை. சமூகத்துக்குப் பயனளிக்கும் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் நல்லது தான் !

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்