மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி அனிதா (வயது 40). சம்பவத்தன்று இவர் மணவாளக்குறிச்சி பாலம் அரு...
மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி அனிதா (வயது 40).

சம்பவத்தன்று இவர் மணவாளக்குறிச்சி பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த பைக் அனிதா மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இதில் படுகாயம் அனிதா படுகாயம் அடைந்தார். உடனே அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு ராஜாக்கமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மோதிய பைக்கை ஓட்டி வந்த மர்மநபர் யார்? என்பது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.
No comments