குமரி மாவட்டத்தில் பெண்கள் பயணிக்க 288 பஸ்களில் இலவசமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில், சாதாரண கட்டான நகர பேருந்துகளில்...
குமரி மாவட்டத்தில் பெண்கள் பயணிக்க 288 பஸ்களில் இலவசமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திமுக தேர்தல் அறிக்கையில், சாதாரண கட்டான நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
நேற்று தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் நகர பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் உள்ளிட்ட 5 திட்டங்களை செயல்படுத்தி உத்தரவிட்டார்.
இதன்படி இன்று (மே 8) முதல் சாதாரண கட்டான நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என அறிவித்தார். குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் போக்குவரத்து கழகத்தில் தற்போது 888 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 444 பேருந்துகள் நகர பேருந்துகள் ஆகும்.
முதல்வரின் அறிக்கையை தொடர்ந்து ஒவ்வொரு வழித்தடத்திலும் 50 சதவீத பஸ்களை பெண்கள் இலவசமாக செல்லும் பேருந்துகளாக அனுமதிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதன்படி, குமரி மாவட்டத்தில் 288 பஸ்களில் இன்று முதல் பெண்கள் இலவசமாக செல்லும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இலவசமாக அனுமதிக்கப்படும் பேருந்துகளின் முன்புறம் இதற்கான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments