கொற்றிக்கோடு பெருஞ்சிலம்பு அரசன்குளத்தில் வசித்து வந்தவர் கமலம் (வயது 70). இவர் கடந்த அக்டோபர் மாதம் 31-ம் தேதி கத்தியால் குத்தி கொலை செய்யப...
கொற்றிக்கோடு பெருஞ்சிலம்பு அரசன்குளத்தில் வசித்து வந்தவர் கமலம் (வயது 70). இவர் கடந்த அக்டோபர் மாதம் 31-ம் தேதி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக கமலத்தின் பேத்தி கணவரான ராஜா (28) என்பவர் மீது கொற்றிக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் போலீஸ் தேடுவதை அறிந்த ராஜா தலைமறைவாகி விட்டார்.

எனவே அவரை பிடிக்க தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் உத்தரவின் பேரில் தக்கலை இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் ராஜா கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று ராஜாவை கைது செய்தனர்.
பின்னர் அவரை தக்கலை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது கமலத்தின் பேத்தியான மாரியம்மாள் என்பவரை ராஜா காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 7 ஆண்டுகள் ஆன நிலையில் இருவருக்கும் குழந்தை இல்லை. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
தன் பேத்தியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததால் ராஜாவை கடுமையாக கமலம் திட்டியதோடு அவமானப்படுத்தியதாகவும் தொிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜா, கமலத்தை தாக்கியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கொற்றிகோடு போலீஸ் நிலையத்தில் கமலம் புகார் அளித்துள்ளார்.
இதை தொடர்ந்து இருவரையும் போலீசார் அழைத்து சமாதானம் பேசி அனுப்பினர். எனினும் ஆத்திரம் தீராததால் சம்பவத்தன்று கமலத்தை, ராஜா கத்தியால் குத்தி கொன்று விட்டு கேரளாவுக்கு தப்பிச் சென்றுள்ளார். பின்னர் பாலக்காடு பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வந்த ராஜாவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இதனையடுத்து ராஜாவிடம் இருந்து வாக்குமூலம் பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
No comments