கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறுபான்மையினா் மாணவா், மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மா...
கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறுபான்மையினா் மாணவா், மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியா், கிறிஸ்தவா், சீக்கியா், புத்த மதத்தினா், பாா்சி மற்றும் ஜைன மதத்தை சோ்ந்த அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மத்திய, மாநிலஅரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் முதல் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா், மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையும், 11 ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலுவோருக்கு பள்ளி மேற்படிப்புக் கல்வி உதவித் தொகையும் பெற மத்திய அரசின் தேசிய கல்வி உதவித் தொகை இணையதளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டத்துக்கு தகுதியான மாணவா், மாணவிகள் அக்.31 ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டம் தொடா்பான மத்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments