மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதா விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாக கூறி திமுக கட்சி சார்பில் ஆர்ப்பாட்...
மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதா விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாக கூறி திமுக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது/

இந்த ஆர்ப்பாட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட திமுக கழக செயலாளரும், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான என். சுரேஷ்ராஜனின் வழிகாட்டுதலின்படி, குருந்தன்கோடு கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.குட்டிராஜன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
மத்திய அரசின் விவசாயிகள் விரோத வேளாண் திருத்த சட்டத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பட்டம் நடைபெற்றது. இதில் வெள்ளிமலை பேரூர் செயலாளர், மணவாளக்குறிச்சி பேரூர் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் முட்டம் ஊராட்சி செயலாளர் அனனியாஸ், குருந்தன்கோடு ஊராட்சி செயாலளர் பெர்வின் விஜய், வெள்ளிசந்தை ஊராட்சி செயலாளர் அந்தோணிஜார்ஜ், ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் பிரபு, ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் சேனிராஜன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
















No comments