கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக முதல்வரின் அறிவிப்பின் படி வரும் செப்டம்பர் மாதம் 30 ம் தேதி வரை ஊரடங்கும் நீடிப்பு செய்யப்படுகிறது என்று ...
கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக முதல்வரின் அறிவிப்பின் படி வரும் செப்டம்பர் மாதம் 30 ம் தேதி வரை ஊரடங்கும் நீடிப்பு செய்யப்படுகிறது என்று கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தமிழக முதல்வரின் அறிவிப்பின் படி பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் செப்டம்பர் மாதம் 30 ம் தேதி இரவு 12 மணி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது.
வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடைபிடிக்கப்பட்ட முழு ஊரடங்கு செப்டம்பர் மாதம் முதல் ரத்து செய்யப்படுகிறது. பேருந்து போக்குவரத்து, இ பாஸ் மற்றும் இதர காரியங்கள் குறித்து தமிழக முதல்வரின் உத்தரவுபடி கன்னியாகுமரி மாவட்டத்தில் அமல்படுத்தப்படும்.
மாவட்டத்தில் மருந்து கடைகள் தவிர அனைத்து கடைகளும் வழக்கம் போல் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments