கொட்டாரம் அருகே வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். 2 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். கன்னியாகுமர...
கொட்டாரம் அருகே வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். 2 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்.

கன்னியாகுமரி பாலசுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் அருள். ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவர் ஆட்டோவில் கொட்டாரம் அச்சங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த ஆட்டோவை 2 பேர் வழிமறித்து அவரிடம் நைசாக பேச்சு கொடுத்தனர். அங்கே 2 பெண்கள் நிற்கிறார்கள், உல்லாசமாக இருக்கிறீர்களா என்று கேட்டுள்ளனர். இதனை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த அருள் அங்கிருந்து ஆட்டோவை ஓட்டிச் சென்றார்.
பின்னர் இதுகுறித்து கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் அந்த பகுதியில் விரைந்து சென்று கண்காணித்தனர். அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
இதில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த காமராஜ் (வயது 41), வீரராஜ் (49) என்பதும், ஆட்டோ டிரைவரை விபசாரத்துக்கு கூப்பிட்டவர்கள் என்பதும் தெரிய வந்தது. பின்னர் அவர்களிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், கொட்டாரம் அச்சங்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து 2 இளம்பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்ட திடுக்கிடும் தகவல் வெளியானது. பின்னர் அந்த வீட்டில் அதிரடியாக நுழைந்து போலீசார் சோதனை செய்தனர். அங்கு 2 இளம்பெண்கள் இருந்தனர்.
இதனை தொடர்ந்து இளம்பெண்களை மீட்டு போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து காமராஜ், வீரராஜ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்திய சம்பவம் கொட்டாரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments