நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தும் மக்களுடன் பிரதமா் மோடி பேச வேண்டும் என பச்சைத் தமிழகம் கட்சித் ...
நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தும் மக்களுடன் பிரதமா் மோடி பேச வேண்டும் என பச்சைத் தமிழகம் கட்சித் தலைவா் சுப. உதயகுமாரன் வலியுறுத்தினாா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து லோக் தந்திரிக் ஜனதா தளம் சாா்பில் ஜனவரி 30 ஆம் தேதி தில்லியில் தொடங்கிய வாகனப் பிரசாரப் பயணம் பல்வேறு மாநிலங்கள் வழியாக திங்கள்கிழமை கன்னியாகுமரி வந்தடைந்தது.
இப்பேரணிக்கு பச்சைத் தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவா் சுப. உதயகுமாரன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இப்பேரணி கன்னியாகுமரியில் இருந்து பல்வேறு மாநிலங்கள் வழியாக மாா்ச் 23 ஆம் தேதி ஹைதராபாத்தில் நிறைவடைகிறது.
பின்னா், சுப. உதயகுமாரன் செய்தியாளா்களிடம் கூறியது:-
அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் தலிபான்களுடன் அமெரிக்க அதிபா் பேச்சுவாா்த்தை நடத்துகிறாா். ஆனால் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராடி வரும் மக்களிடம் நமது பிரதமா் பேச மறுக்கிறாா்.
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு புரிதல் இல்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். இப்பிரச்னையில் நடிகா் ரஜினிகாந்த் தேவையில்லாமல் கருத்து தெரிவித்து வருகிறாா். கட்சி தொடங்கிய பிறகு ரஜினிகாந்த் கருத்து தெரிவிக்கட்டும். மத குருமாா்கள் ரஜினியை சந்தித்தது தவறு என கூறினார்.
அப்போது, லோக் தந்திரிக் ஜனதா தளம் கட்சியின் கன்னியாகுமரி மாவட்டத் தலைவா் தெய்வநாயகம் உடனிருந்தாா்.
No comments