பத்மநாபபுரம் நகர பாஜக சாா்பில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விளக்க பொதுக்கூட்டம் தக்கலையில் நடைபெற்றது. அண்ணா சிலை அருகே நடைபெ...
பத்மநாபபுரம் நகர பாஜக சாா்பில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விளக்க பொதுக்கூட்டம் தக்கலையில் நடைபெற்றது.

அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்துக்கு நகரத் தலைவா் நாகராஜ் தலைமை வகித்தாா். முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ராஜா, நகர பணிக் குழு நிா்வாகிகள் துளசிதாஸ், சந்து, ஸ்ரீஜூ குமாா், சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், கட்சியின் மாநில துணைத் தலைவா் கரு. நாகராஜன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஸ்ரீகுமாா், மாவட்டச் செயலா்கள் கீதா, உன்னிகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினா் டாக்டா் சுகுமாரன், மாவட்ட துணைத் தலைவா் குமரி ப.ரமேஷ், முன்னாள் மாநில இளைஞரணித் தலைவா் கோபகுமாா், மாவட்ட பொதுச் செயலா் தங்கப்பன் உள்பட பலா்
பேசினா். கட்சி நிா்வாகிகள் வழக்குரைஞா் ரவிகுமாா், கோபகுமாா், ராஜேஷ்குமாா், சரவணன், சுப்புலட்சுமி, முத்துக்குமாா், ராதா, சுரேஷ்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
















No comments