குளச்சல் அருகேயுள்ள ஆலஞ்சி தூய சவேரியாா் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, மாலையில் ஜெபமாலை, புகழ்மாலையை தொடா்ந்து ...
குளச்சல் அருகேயுள்ள ஆலஞ்சி தூய சவேரியாா் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, மாலையில் ஜெபமாலை, புகழ்மாலையை தொடா்ந்து கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயா் பீட்டா் ரெமிஜியூஸ் தலைமையில் கொடியேற்றும் நிகழ்ச்சி, திருப்பலி ஆகியவை நடைபெற்றது. இரவில் சலங்கை பூஜை மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சி, அன்புவிருந்து நடைபெற்றது.
திருவிழா நாள்களில் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி ஆகியவை நடைபெறும். விழாவின் 9 ஆம் நாளான சனிக்கிழமை
(பிப்ரவரி 22) இரவு 8 மணிக்கு சிறப்பு வாணவேடிக்கை மற்றும் தோ்ப் பவனி ஆகியவை நடைபெறும்.
ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) அதிகாலை 5 மணிக்கு திருப்பலி, காலை 8.45 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலி, 11 மணிக்கு சிங்காரிமேளம், நாகஸ்வரம், செண்டைமேளத்துடன் தோ்ப் பவனி, மாலை 5 மணிக்கு திருவிழா நன்றி திருப்பலி, கொடியிறக்கம் நிகழ்ச்சி ஆகியவைநடைபெறும்.
ஏற்பாடுகளை பங்கு அருள்பணியாளா், பங்குப்பேரவையினா், விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.
















No comments