அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் ஆக்ஸ்போர்டு அருகேயுள்ள பென்டன் கவுன்டி பகுதியை சேர்ந்த பெண் லாரா ஹர்ஸ்ட்(36). இவர் பாம்புகளை வளர்ப்பதி...
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் ஆக்ஸ்போர்டு அருகேயுள்ள பென்டன் கவுன்டி பகுதியை சேர்ந்த பெண் லாரா ஹர்ஸ்ட்(36). இவர் பாம்புகளை வளர்ப்பதிலும் அவற்றை பராமரிப்பதிலும் மிகவும் ஆர்வம் காட்டி வந்தார்.
இந்நிலையில் அவர் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது கழுத்தில் மலைப்பாம்பு ஒன்று சுற்றிய நிலையில் உயிருடன் இருந்தது. எனவே, அந்த பாம்பு கழுத்தை இறுக்கியதில் ஹர்ஸ்ட் உயிர் இழந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
அந்த மலைப்பாம்பு 8 அடி நீளம் கொண்டது. அதை அவரது கழுத்தில் இருந்து அகற்ற டாக்டர்கள் எவ் வளவோ முயற்சி செய்தனர். ஆனால் பலனில்லை. மலைப்பாம்பை கழுத் தில் இருந்து அகற்ற முடிய வில்லை.
அவரது வீட்டுக்கு அருகே பென் டன் கவுன்டியின் செரிப் டான் முன்சன் குடி யிருக்கிறார். மரணம் அடைந்த லாரா ஹர்ஸ்ட் தனது வீட்டில் 140 பாம்புகளை வளர்த்து வந்தாக அவர் கூறினார்.
No comments