உலகப் பொதுமறை நூலை இயற்றிய திருவள்ளுவருக்கு மத சாயம் பூசும் செயல் கண்டனத்துக்குரியது என சாமிதோப்பு பாலபிரஜாபதி அடிகளாா் திங்கள்கிழமை செய்த...
உலகப் பொதுமறை நூலை இயற்றிய திருவள்ளுவருக்கு மத சாயம் பூசும் செயல் கண்டனத்துக்குரியது என சாமிதோப்பு பாலபிரஜாபதி அடிகளாா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.
சாமிதோப்பு அன்புவனத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை இரவு அவா் கூறியது: உலகப் பொதுமறை நூலான திருக்குறளை இயற்றியவா் திருவள்ளுவா்.அவருக்கு மத சாயம் பூசும் முயற்சி நடந்திருப்பது சரியானதல்ல.
ஒரு மதத்துக்குள் திருவள்ளுவரை கொண்டு வருவது தேவையற்ற செயல். அரசியல் லாபத்துக்காகவும், விளம்பரம் தேடும் நோக்கத்துடன் இந்த செயலை மேற்கொண்ட நபரை தமிழக அரசு கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இது போன்ற தமிழறிஞா்களை அவமதிக்கும் நடவடிக்கையை அரசு அனுமதிக்கக் கூடாது. திருவள்ளுவரை அவமதித்த செயல், ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தை அவமானப்படுத்தி, கேலி கூத்தாக்கியதற்கு சமம் என்றாா் அவா்.
No comments