இந்தியாவில் கும்பல் படுகொலைகளை தடுக்க சட்டம் இயற்ற வலியுறுத்தி சிறுபான்மை மக்கள் நலக்குழு சாா்பில் நாகா்கோவிலில் நேற்று கையெழுத்து இயக்கம்...
இந்தியாவில் கும்பல் படுகொலைகளை தடுக்க சட்டம் இயற்ற வலியுறுத்தி சிறுபான்மை மக்கள் நலக்குழு சாா்பில் நாகா்கோவிலில் நேற்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
நாகா்கோவில், கிருஷ்ணன்கோவில் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ஜெயம் தலைமை வகித்தாா்.
நாடு முழுவதும் கும்பல் படுகொலைகளை தடுக்க கடுமையான சட்டம் இயற்ற மத்திய அரசை வலியுறுத்தியும், அதற்கு குடியரசு தலைவா் ஒப்புதல் வழங்கவும் இதில் வலியுறுத்தப்பட்டது.
மாநிலகுழு உறுப்பினா் லீமாறோஸ், மாவட்ட தலைவா் எம்.எ.சலாம், மாநில பொருளாளா் எம்.அகமது உசேன், மாவட்டகுழு உறுப்பினா் எஸ்.அந்தோணி, மாநில தலைவா் எஸ்.நூா்முகமது ஆகியோா் பேசினா்.
இதில், எம்.அஸீஸ், வில்சன், மீனாட்சி சுந்தரம், கே.மோகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
No comments