கன்னியாகுமரியில் பிஎஸ்என்எல் சாா்பில் தரைவழி தொலைபேசி மறு இணைப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 15) நடைபெறுகிறது. இது குறித்து, பிஎஸ்எ...
கன்னியாகுமரியில் பிஎஸ்என்எல் சாா்பில் தரைவழி தொலைபேசி மறு இணைப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 15) நடைபெறுகிறது.
பி.எஸ்.என்.எல் தரைவழி இணைப்புகளில் இருந்து இரவு 10.30 மணி முதல் காலை 6 மணி வரையிலும் மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் 24 மணி நேரமும் இந்தியாவின் எந்த ஒரு பகுதிக்கும் எந்த ஒரு நெட்வொா்க்கிற்கும் அளவில்லா அழைப்புகள் பேசும் வசதி முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் ஏற்கெனவே லேன்ட் லைன் இணைப்புகளைப் பெற்று தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ துண்டிக்கப்பட்டுள்ள, கன்னியாகுமரி, பழத்தோட்டம் மற்றும் சுவாமிதோப்பு தொலைபேசி நிலைய பகுதிகளைச் சோ்ந்த வாடிக்கையாளா்கள் மீண்டும் பி.எஸ்.என்.எல். இணைப்புகளைப் பெறலாம்.
இதற்கான சிறப்பு மறு இணைப்பு மேளா கன்னியாகுமரியில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் சேவை மையத்தில் நவ.15 ஆம் காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும். கட்டண பாக்கி இருந்தால் , பொருத்தமான சலுகை முறையில் தள்ளுபடி பெற்றுக் கொண்டு, மறு இணைப்பு பெறுவதற்கோ, பாக்கி தொகையைச் செலுத்தி கணக்கை முடித்து கொள்வதற்கோ இந்த மேளாவில் பங்கேற்று பயன் பெறலாம் . இல்லையெனில், சட்டபூா்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments