கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஐயப்ப பக்தா்கள் சீசனை முன்னிட்டு பாதுகாப்பு மிதவை அமைக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்ப பக்தா்கள் சீசன் ...
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஐயப்ப பக்தா்கள் சீசனை முன்னிட்டு பாதுகாப்பு மிதவை அமைக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்ப பக்தா்கள் சீசன் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 17) தொடங்கி வரும் 2020 ஜனவரி 17ஆம் தேதி வரை 60 நாள்கள் நடைபெறுவது வழக்கம்.
இந்த சீசனில் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தா்கள் கன்னியாகுமரிக்கு வருகை தருகின்றனா். இங்கு வருகை தரும் ஐயப்ப பக்தா்கள் முக்கடல் சங்கமத்தில் நீராடி பகவதியம்மனை வழிபட்டுச் செல்கின்றனா்.
இதையொட்டி, பக்தா்கள் பாதுகாப்பாக கடலில் குளிக்கும் வகையில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் முக்கடல் சங்கமத்தில் 210 மீட்டா் தொலைவுக்கு பாதுகாப்பு மிதவை அமைக்கப்பட்டுள்ளது. பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இந்த மிதவையைக் கடந்து சென்று குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், போலீஸாா் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தா்களின் வசதிக்காக தற்காலிக கழிப்பறைகள், குடிநீா் வசதி, கண்காணிப்பு கேமரா, புறக்காவல் நிலையம் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி சுற்று வட்டாரப் பகுதியைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 17) அதிகாலையில் முக்கடல் சங்கமத்தில் நீராடி, கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் குருசுவாமி கையால் மாலை அணிந்து விரத்தை தொடங்குகின்றனா். இதற்காக முக்கடல் சங்கமம் மற்றும் பகவதியம்மன் கோயில் வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
No comments