Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

இலங்கை அதிபராகிறார் கோத்தபயா ராஜபக்சே

இலங்கை அதிபர் தேர்தல் ஓட்டு எண்ணும் பணி துரிதமாக நடந்து வருகிறது. கோத்தபய ராஜபக்சேயின் (Gotabaya Rajapaksa) பொதுஜன பெரமுனா கட்சி முன்னிலை ...

இலங்கை அதிபர் தேர்தல் ஓட்டு எண்ணும் பணி துரிதமாக நடந்து வருகிறது. கோத்தபய ராஜபக்சேயின் (Gotabaya Rajapaksa) பொதுஜன பெரமுனா கட்சி முன்னிலை வகிக்கிறது. இதன்படி கோத்தபயா இலங்கையின் 7 வது அதிபராக பொறுப்பேற்கவுள்ளார்.
தேர்தல் முடிவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாலை அறிவிக்கப்படும். அண்டை நாடான இலங்கையில், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று (16 ம் தேதி) நடந்தது. இத்தேர்தலில்,கோத்தபயா ராஜபக்சேயின் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சிக்கும் , சஜித் பிரேமதாசாவின் தேசிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையே இருமுனை போட்டி நிலவியது.
தற்போதைய அதிபர் சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.1.6 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றிருந்தனர். இதற்காக, நாடு முழுவதும், 12 ஆயிரத்து, 845 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்தலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பதற்றம் நிறைந்த ஓட்டுச் சாவடிகளுக்கு, பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், பாதுகாப்பு படையினர், சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி, ஓட்டளிக்க விடாமல் இடையூறு ஏற்படுத்தியதாகவும் புகார் கூறப்பட்டது. ஒரு சில சிறிய சம்பவங்களை தவிர, பெரும்பாலான இடங்களில் அமைதியாகவே தேர்தல் நடந்தது.இந்நிலையில் ஓட்டு எண்ணும் பணி தற்போது நடந்து வருகிறது.
அதன்படி, இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய கட்சி 50.55 சதவீதம் ( 56 லட்சத்து 95 ஆயிரத்து 45 ) ஓட்டுகளும், புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளரான சஜித் பிரேமதாச 43.49 சதவீதம் ( 46 லட்சத்து 82 ஆயிரத்து 726 ) ஓட்டுகளும் பெற்றுள்ளனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்