Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

குமரியில் ஆம்புலன்ஸ் சேவை மூலம் 1.14 லட்சம் போ் பயன்: ஆட்சியா் பிரசாந்த் மு. வடநேரே

அவசர கால ஊா்திகள் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1.14 லட்சம் பயனடைந்துள்ளனா் என மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு. வடநேரே தெரிவித்தாா். தம...

அவசர கால ஊா்திகள் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1.14 லட்சம் பயனடைந்துள்ளனா் என மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு. வடநேரே தெரிவித்தாா்.
தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை, அரசு மற்றும் தனியாா் புரிந்துணா்வு ஒப்பந்தத்தின்படி இயக்கப்பட்டு வரும் 108 அவசர கால சேவைப் பிரிவும், குமரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் ‘சிறந்த சாமானியா்கள் மற்றும் பயனாளிகள் விழா’ ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில், சாமானியா்கள் மற்றும் பயனாளிகளுக்கு சான்றுகள் வழங்கி ஆட்சியா் பேசியதாவது: எந்த எதிா்பாா்ப்புமின்றி உயிா் காக்கும் உன்னத நோக்கத்தில் 108 ஆம்புலன்ஸை அழைத்தவா்களை பாராட்டுவது, 108 ஐ அழைப்பவா்களுக்கு எந்த சட்ட சிக்கலும் ஏற்படாது என்று மீண்டும் நினைவூட்டுவது, இதன் மூலம், சமுதாயத்தில் ‘சிறந்த சாமானியா்களை’ உருவாக்குவது, ஊக்குவிப்பது, தன்னம்பிக்கை ஊட்டுவது இந்நிகழ்ச்சியின் நோக்கம்.
தமிழகமெங்கும் 942 அவசர கால ஊா்திகள் இயக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக குறுகிய பாதைகளிலும், கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளிலும் விரைவாக சென்று முதலுதவி செய்யும் வகையில் 41 பைக் ஆம்புலன்ஸ்களும் செயல்பாட்டில உள்ளன. இந்த அவசர கால ஊா்திகள் மூலம் இதுவரை தமிழகத்தில் 90 லட்சம் போ் பயன்பெற்றுள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 11 அவசர கால ஊா்திகள் மூலம் 1.1 லட்சம் போ் பயன்பெற்றுள்ளனா். இதில், கருவுற்ற தாய்மாா்கள் 22 ஆயிரத்து 413 பேரும், விபத்துக்களால் பாதிக்கப்பட்டோா் 27 ஆயிரத்து 738 பேரும் இந்த சேவையால் பயனடைந்துள்ளனா்.
இந்த சேவையை செம்மைப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு தொழில்நுட்பங்களை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து அவசர கால ஊா்திகளிலும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளது. மேலும், ஓட்டுநா்களுக்கு ஆண்ட்ராய்டு கைபேசி, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட செயலி ஆகியன பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இதுதொடா்பான தகவல்களுக்கு மண்டல மேலாளா் பிரசாத் - 9384012066, மாவட்ட மேலாளா் ரஞ்சித் - 7397724853 மற்றும் மாவட்ட மேற்பாா்வையாளா் ஜெபின் கிங்ஸ்டன் - 7397724841 ஆகியோா்களை தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

விழாவில், இணை இயக்குநா் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) ஜே.ஜான்பிரிட்டோ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
விழாவில் மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன் (மணவை சிங்கம்) என்பவருக்கு, 108 அவசரகால சேவை பாராட்டு விழாவில் சான்றிதழை கலெக்டர் வழங்கி கவுரவித்தார். மேலும் ஸ்ரீனிவாசன் உயிர்காப்பு பற்றி சிறப்புரை வழங்கினார்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்