மணவாளக்குறிச்சி அருகே உள்ள அம்மாண்டிவிளை பகுதியில் மதுபானக் கடை வேண்டும் என்று நோட்டீஸ் ஒட்டி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம் ம...
மணவாளக்குறிச்சி அருகே உள்ள அம்மாண்டிவிளை பகுதியில் மதுபானக் கடை வேண்டும் என்று நோட்டீஸ் ஒட்டி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த மதுபான கடைகளை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, நெடுஞ்சாலைகளில் இருந்த மதுபான கடைகள் மாற்றப்பட்டு, ஊர்புற சாலைகளில் திறக்கட்டு இருந்தது.
இதன்படி, மணவாளக்குறிச்சி, அம்மாண்டிவிளை பகுதியில் அமைந்திருந்த மதுபானக் கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. இதனால் “குடி”மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
அவர்கள் அருகில் உள்ள குளச்சல் அல்லது வெள்ளிச்சந்தை பகுதிக்கோ செல்ல நேர்ந்தது. மேலும் பயண செலவுடன், கால விரயமும் அவர்களை கஷ்டப்படுத்தியது. மது அருந்திய பின்னர், வீடு வந்து சேருவதற்குள் போதையும் சற்று தீர்ந்து விடுகிறது.
இதற்கு மாற்றுவழி தெரியாமல் “குடி”மக்கள் ஆலோசித்த நிலையில் இருந்ததாக தெரிகிறது. திடீரென அம்மாண்டிவிளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மதுபான கடை வேண்டும் என்ற சுவரொட்டி அனைவரையும் ஆச்சரியத்துடன் அதிர்ச்சியடைய வைத்தது.
அந்த சுவரொட்டியில், ‘தமிழக அரசே! மாவட்ட நிர்வாகமே! வெள்ளிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட அம்மாண்டிவிளை பகுதியில் மதுபான கடை வேண்டும், மதுபான கடை வேண்டும் என எழுதியிருந்தது’ மேலும் அதில் அம்மாண்டிவிளை சுற்றுவட்டார ஊர் பொதுமக்கள் சார்பில் ஒட்டப்பட்டதாகவும் இருந்தது.
இந்த பரபரப்பு நோட்டீஸ் தற்போது அனைத்து வாட்ஸ்அப் குரூப்கள் மற்றும் முகநூலில் பரப்பப்பட்டு வருகிறது. பல ஊர்களில் மதுபான கடை திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த நோட்டீஸ் அப்பகுதி பொதுமக்களை கவலைக்குள்ளாக்கியது.
No comments