மணவாளக்குறிச்சி காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் தங்கராஜ். சமீபகாலமாக, மணவாளக்குறிச்சி மக்களின் பாராட்டுகளையும், ஆதரவையும் பெற...
மணவாளக்குறிச்சி காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் தங்கராஜ். சமீபகாலமாக, மணவாளக்குறிச்சி மக்களின் பாராட்டுகளையும், ஆதரவையும் பெற்றுவருகிறார். அவரின் பணிகளுக்கும், அனைத்து முயற்சிகளுக்கும் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் ஆதரவுகரம் நீட்டுகின்றனர்.
Manavalakurichi Auto Stand - Two Wheeler Park |
மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்துவந்த கார் ஸ்டாண்ட், மணவாளக்குறிச்சி பாலம் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டு, இப்போது போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாமல் காணப்படுகிறது. அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.
சுமார் 60 க்கும் மேல் ஆட்டோக்களை கொண்டுள்ள மணவாளக்குறிச்சி ஆட்டோ ஸ்டாண்ட், மணவாளக்குறிச்சியில் இருந்து வடக்கன்பாகம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. ஆட்டோக்கள் வரிசையில் ரோட்டோரம் நிற்பதால், ரோடு குறுகலாக காணப்பட்டு, வாகனங்கள் செல்ல சிரமப்பட்டன. அதற்கு தீர்வுக்காண காவல் ஆய்வாளர் தங்கராஜ் நடவடிக்கை மேற்கொண்டார்.
அதற்காக பேரூராட்சி அதிகாரிகளுடன் ஆலோசித்து, ஆட்டோக்கள் நிறுத்தும் இடத்தை ஒழுங்குமுறைபடுத்தி, சீர்செய்து, இடையூறாக இருந்த கம்பங்கள் மாற்றம் செய்யப்பட்டு, ஓரமாக நிற்கும்படி செய்து, அந்த சாலையை அகலப்படுத்தி, இப்போது வாகனங்கள் சிரமமின்றி செல்ல வழிவகை செய்தார்.
மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் போக்குவரத்தை பாதிக்கும்படி இருசக்கர வாகனங்களை சிலர் ரோட்டோரம் நிறுத்தி செல்வர். அதனை மாற்றி இருசக்கர வாகனங்கள் நிற்கும் இடத்தை தேர்வுசெய்து, அதற்கான அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு மக்களின் பாராட்டுகளை பெற்றார்.
Mandaikadu Car Park - Entrance |
மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்தும் இடத்தை ஒழுங்குபடுத்தி, இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் தனித்தனியே நிற்கும் இடங்களை தேர்ந்தெடுத்து, கோவிலுக்கு வரும் பக்தர்களை பாதிக்காதவண்ணம் முயற்சிகளை மேற்கொண்டார்.
பொதுமக்களுக்கு நன்மை செய்யும் பல்வேறு நடவடிக்கைகளை சீரிய முறையில் மேற்கொள்ளும் மணவாளக்குறிச்சி காவல் ஆய்வாளர் தங்கராஜ் அவர்களை மக்களை அன்போடு பாராட்டி வருகின்றனர்.
No comments