அரபு நாடுகளில் அபுதாபி பிக் டிக்கெட் லாட்டரிகள் பிரபலம். அரபு நாடுகளில் இந்தியர்கள் ஏராளமானவர்கள் பணிபுரிகிறார்கள். இந்த பிக் டிக்கெட் லாட...
அரபு நாடுகளில் அபுதாபி பிக் டிக்கெட் லாட்டரிகள் பிரபலம். அரபு நாடுகளில் இந்தியர்கள் ஏராளமானவர்கள் பணிபுரிகிறார்கள். இந்த பிக் டிக்கெட் லாட்டரியில் அடிக்கடி இந்தியர்களுக்கு பரிசுகள் கிடைக்கின்றன.
குடும்ப சூழல், வறுமை காரணமாக வெளிநாடுகளுக்கு பயணப்படும் இளைஞர்கள் நமக்கு வாழ்வில் அதிர்ஷ்டம் அடிக்காதா என்ற நம்பிக்கையில் இது போன்ற லாட்டரிகளை வாங்குகிறார்கள். நிறைய இந்தியர்கள் இதில் கோடிகளை அள்ளியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று நடந்த லாட்டரி குலுக்கலில் ஸ்ரீனு ஸ்ரீதரன் நாயர் என்பவருக்கு 15 மில்லியன் திர்ஹாம் பரிசாக விழுந்துள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் 28 கோடி ரூபாய்.
லாட்டரி நிறுவனம் ஸ்ரீனு ஸ்ரீதரனின் மொபைல் எண்ணுக்கு தொடர்புகொண்டுள்ளனர். ஆனால், வேறொருவருக்கு அழைப்பு சென்றுள்ளது. சரி என்று மற்றொரு எண்ணுக்கு அழைத்துள்ளனர். அப்போதும் வேறு நபருக்கு அழைப்பு சென்றுள்ளது. போனை எடுத்த அவர், `ஸ்ரீதரனை எனக்குத் தெரியும் இப்போது அவர் இங்கு இல்லை.
அரைமணி நேரத்துக்குப் பிறகுதான் வருவார் எனத் தெரிவித்துள்ளார். ஒரு வழியாக அந்த நிறுவனத்தினர் ஸ்ரீதரனை கண்டுபிடித்துவிட்டனர்.
இதுகுறித்துப் பேசிய ஸ்ரீதரன், ``என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. நான் வென்ற சரியான தொகை எவ்வளவு என்பது எனக்குத் தெரியாது. இந்தச் செய்தி என்னை மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது. என்னுடைய செல்போன் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
இந்தப் பணத்தை வைத்து என்ன செய்வது என சிந்திக்கக்கூட எனக்கு நேரமில்லை. ஆலப்புழாவில் சொந்தமாக வீடுகட்டிக்கொண்டிருந்தேன். என்னிடம் போதிய பணம் இல்லாததால் அந்தப் பணிகள் பாதியில் தடைப்பட்டது. இனி அந்தப் பணிகளை முழுமையாக முடித்து விடுவேன். சேமிப்புக்கு பாதித் தொகையை
28 வயதான ஸ்ரீதரனுக்கு இன்னும் திருமணமாகவில்லை.
அவரது குடும்பம் வறுமையில் வாடிவருகிறது. ஞாயிற்றுக்கிழமை நடந்த லாட்டரி குலுக்கலில் அவருக்கு பரிசு விழுந்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவரைத் தொடர்புகொள்ள முயன்றும் முடியவில்லை.
அவருக்கு ஜாக்பாட் அடித்த செய்தியை இன்றுதான் தெரிவித்துள்ளனர். தனியார் நிறுவனத்தில் டெக்னிக்கல் பிரிவில் 1,500 திர்ஹாம் ஊதியத்தில் பணியாற்றி வந்தார். தற்போது அவரது வாழ்வில் லாட்டரி மூலமாக ஜாக்பாட் அடித்துள்ளது.
No comments