Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

ரபேல் விமான சக்கரத்துக்கு அடியில் எலுமிச்சை வைத்தது இந்திய கலாசாரம்: நிர்மலா சீதாராமன்

ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், சமீபத்தில் முதலாவது ரபேல் விமானத்தை பெற்றுக்கொண்டார். அப்போது, அந்த விமானத்தின் மீது ‘ஓம்’ என்று எழுதியும், த...

ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், சமீபத்தில் முதலாவது ரபேல் விமானத்தை பெற்றுக்கொண்டார். அப்போது, அந்த விமானத்தின் மீது ‘ஓம்’ என்று எழுதியும், தேங்காய் வைத்தும், சக்கரத்துக்கு அடியில் எலுமிச்சை பழம் வைத்தும் பூஜை செய்தார்.
இதுகுறித்து விமர்சனம் எழுந்தநிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
அதில் என்ன தவறு? அதை நீங்கள் அங்கீகரிக்காமல் இருக்கலாம். மூடநம்பிக்கை என்று நினைக்கலாம். அதுபற்றி எங்களுக்கு கவலை இல்லை. நம்பிக்கை இருப்பவர்கள் செய்யட்டும்.

ராஜ்நாத் சிங் செய்ததெல்லாம் சரி என்றே நான் கருதுகிறேன். இவையெல்லாம் இந்திய கலாசாரத்தை சேர்ந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் இதை செய்கிறார்கள்.
முன்பு, ராணுவ மந்திரியாக இருந்தவரும், அவருடைய மனைவியும் கடற்படை கப்பலை தொடங்கி வைத்தபோது அவர்களது மத நம்பிக்கைப்படி செயல்பட்டுள்ளனர். 

இப்போது கவலைப்படுபவர்கள், அப்போது எங்கே இருந்தனர்? இவ்வாறு அவர் கூறினார்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்