தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களையும் டெங்கு காய்ச்சல் ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கிறது. மற்ற காய்ச்சல்களைப் போல டெங்கு காய்ச்சலை ஒரு ஊசி ...
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களையும் டெங்கு காய்ச்சல் ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கிறது. மற்ற காய்ச்சல்களைப் போல டெங்கு காய்ச்சலை ஒரு ஊசி போட்டுக்கொள்வதாலோ, சில மாத்திரைகளை விழுங்குவதாலோ குணப்படுத்திவிட முடியாது.

ஏற்கனவே மற்ற காய்ச்சல்களுக்கும், சளி போன்ற நோய்களுக்கும் சித்த மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலவேம்பு கசாயம், டெங்கு காய்ச்சலுக்கும் மருந்தாக வழங்கப்படுகிறது.
டெங்கு காய்ச்சல் ஏற்படும்போது ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கை வேகமாக குறைகிறது. இதை கட்டுப்படுத்த தவறும்போது மரணத்தை சந்திக்க வேண்டியதாகி விடுகிறது.
நிலவேம்பு கசாயம் அருந்தும்போது, அது ரத்தத்தில் தட்டணுக்கள் குறைவதை தடுத்து நிறுத்துவதோடு, தட்டணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் உதவுகிறது என்று சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மேலும், டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் தடுப்பதில் நிலவேம்பு கசாயம் முக்கிய பங்கு வகிப்பதால், தமிழக அரசும், பல தொண்டு நிறுவனங்களும், அரசியல் கட்சியினரும் ஆங்காங்கே நிலவேம்பு கசாயத்தை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்கள்.

இதனால்தானோ அல்லது வேறு காரணமோ, இப்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஓரளவுக்கு கட்டுப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனடிப்படையில், தமிழக அரசின் சுகாதாரத் துறை சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் மணவாளக்குறிச்சி பள்ளிவாசல் வளாகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த முகாமை எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் சேரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் நடத்தப்பட்டது.
நேற்று வெள்ளிக்கிழமை என்பதால், பள்ளிவாசலில் தொழுகைக்கு வரும் இஸ்லாமிய மக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் நடத்தப்பட்டது.
முகாமில் சேரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கலந்து கொண்டனர். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகள் சாதிக் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் நிலவேம்பு கசாயம் வாங்கி பருகி சென்றனர்.
















No comments