Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

சினிமா தொழில் நேர்மையை மட்டும் கற்றிருக்கிறேன்: நடிகர் கமலஹாசன் உருக்கம்

சினிமா தொழில் நேர்மையை மட்டும் கற்றிருக்கிறேன்:  நடிகர் கமலஹாசன் உருக்கம் 30-01-2013 நடிகர் கமலஹாசன் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது ப...

சினிமா தொழில் நேர்மையை மட்டும் கற்றிருக்கிறேன்: 
நடிகர் கமலஹாசன் உருக்கம்
30-01-2013
நடிகர் கமலஹாசன் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது பழைய வீட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- இது நான் சிறுவயதில் இருந்து ஓடி விளையாடி வளர்ந்த வீடு இது. இங்கு இருந்து பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன். இது எனது சொந்த வீடு. இதில் எனது சகோதரர்களுக்கும் உரிமை உண்டு. அவர்களிடம் இருந்து நான் விலைக்கு வாங்கி விட்டேன். நான் கொடுத்த பணத்தை என் தந்தை எல்லா சகோதரர்களுக்கும் பிரித்து கொடுத்து விட்டார். 


நான் எடுக்கும் படத்தில் எனது சகோதரர் சந்திரஹாசன் பங்குதாரர் என்று வரும். அவர் சம்பளமாக பணம் எதுவும் வாங்கியது இல்லை. சிறுவயதில் இருந்து இன்று வரை என்னை தன் பொறுப்பில் வளர்த்து வருகிறார். தற்போது என்ன நடக்கிறது என்று எனக்கு தெரிய வில்லை. அது தெரிந்தால் நான் அரசியல் வாதியாகி விடுவேன் என்ற பயம் இருக்கிறது. 


இன்று காலை படம் வெளிவரும் என்று எதிர்பார்த்தேன். தியேட்டர்களில் எனது ரசிகர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். என் ரசிகர்களில் இஸ்லாமியரும் இருக்கிறார்கள். சினிமாதான் என் தொழில். நான் நேர்மையை மட்டுமே கற்று இருக்கிறேன். இந்த படத்தில் நிறைய முதலீடு செய்து இருக்கிறேன். ரசிகர்களின் திறமையையும், நம்பி படத்திற்கு முதலீடு செய்து இருக்கிறேன். இருக்கிற சொத்துக்களை விட அதிகம் கடன் வாங்கி முதலீடு செய்து இருக்கிறேன். 


ரசிகர்கள் மீதும் படத்தின் மீதும் இருக்கும் நம்பிக்கையில் சொத்துக்களை வைத்து விளையாடி இருக்கிறேன். சரியான நேரத்தில் பணத்தை கட்டவில்லை என்றால் சொத்துக்களை தனதாக்கி கொள்ளலாம் என பணம் கொடுத்தவருக்கு எழுதி கொடுத்துள்ளேன். இதுபோல் பல இடை யூறுகளை சந்தித்து உள்ளேன். ராஜபார்வை படத்தில் நிறைய இழந்தேன். அதில் இருந்து மீள 7, 8 வருடங்கள் வேலை செய்ய வேண்டி இருக்கிறது. 


1986-ல் மறுபடியும் பூஜ்ஜியம் நிலைக்கு தள்ளப்பட்டேன். அதில் இருந்து மீண்டு இப்போது ரூ.100 கோடி செலவில் படத்தை எடுத்துள்ளேன். அதற்கும் நிறைய தடங்கல்கள். தமிழகத்தில் நான் இருக்க வேண்டியது இல்லை என்று நினைக்கிறார்களோ என தெரியவில்லை. எனக்கு சிறு ஆசை வந்துள்ளது. மதசார்பற்ற மாநிலத்தில் குடியேற விரும்புகிறேன். காஷ்மீரில் இருந்து கேரளா வரை மதசார்பற்ற இடம் கிடைக்குமா என்று தேடுவேன். இங்கு கிடைக்கா விட்டால் வேறு நாடுதான். கோபத்தில் இதை நான் சொல்லவில்லை. புண்பட்டது போதும், உனக்கு தமிழர்களை பிடிக்கவில்லையா என்று கேட்கலாம். தமிழர்கள் என் உயிர். 


உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று என் உடலையும், மக்களுக்குத்தான் கொடுத்து இருக்கிறேன். நடந்துள்ள சம்பவங்கள் என் மனதை உருக்கிவிட்டன. என் சொத்துக்களை எடுத்தால்தான் தேசத்துக்கு ஒற்றுமை கிடைக்கும் என்றால் தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள். நான் குழந்தையாக நடிகையர் திலகம் (சாவித்திரி) கையில் இருந்தவன். ஜெமினி கணேசன் கையைப் பிடித்து நடை பயின்றவன். நடிகர் திலகத்தின் மடியில் அமர்ந்தவன். எம்.ஜி.ஆரின் தோளில் ஏறி அமர்ந்தவன். அப்படி வளர்ந்த பிள்ளை நான். எனக்கு பயம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்