விஸ்வரூபம் இரண்டாம் பாகம் இந்த ஆண்டில் வெளியாகும் 10-09-2013 விஸ்வரூபம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டில் வெளியாகும் வாய்ப்...
விஸ்வரூபம் இரண்டாம் பாகம் இந்த ஆண்டில் வெளியாகும்
10-09-2013
விஸ்வரூபம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டில் வெளியாகும் வாய்ப்புள்ளது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
பெங்களூருக்கு சனிக்கிழமை வந்த அவர், நடிகர் அம்பரீஷை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் கூறியது:- எனது சொந்த மாநிலமான தமிழகத்தில் விஸ்வரூபம் திரைப்படம் வெளியாவதில் பிரச்னை எழுந்த போதும், கர்நாடகம், கேரள மாநிலங்கள் திரைப்படத்தை வெளியிட அனுமதி அளித்தன. இது பிற மாநிலங்களுக்கு நல்ல உதாரணமாக அமைந்தது.
விஸ்வரூபம் திரைப்படம் வெற்றி பெற்றதற்குக் காரணமாக அமைந்த கர்நாடக அரசு, காவல் துறை, திரைப்பட விநியோகிப்பாளர்கள், ரசிகர்கள், கன்னட மக்கள் அனைவருக்கும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன். இந்த விவகாரத்தில் இந்திய மக்கள், ஊடகங்கள் அளித்த ஒத்துழைப்பை வாழ்நாளில் மறக்க மாட்டேன். இந்திய மக்களின் அன்பு, பாசத்திற்கு என்றென்றும் நன்றிக் கடன்பட்டுள்ளேன்.
விஸ்வரூபம் திரைப்படத்தின் சர்ச்சை எப்படித் தொடங்கியது என்று தெரியாது. உரிய நேரத்தில் தமிழகத்தில் திரைப்படத்தை வெளியிடாததால் ஏற்பட்ட நஷ்டத்தை மக்கள் ஈடுகட்டியுள்ளனர். தமிழகத்தில் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், விஸ்வரூபம் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தொடங்கியுள்ளன. எல்லாம் சரியாக நடைபெற்றால் அதை இந்த ஆண்டிலேயே திரையிடுவேன். அந்தப் படத்துக்கு எதிர்ப்பு இருக்காது என்று நம்புகிறேன்.
விஸ்வரூபம் இரண்டாம் பாகம் முடிந்ததும் ஹாலிவுட் திரைப்படத்துக்கான பணிகள் தொடங்கும். அரசியலில் எனக்கு எப்போதும் ஈடுபாடு இருந்தது இல்லை. இனியும் ஈடுபாடு வராது என்றார் கமல்ஹாசன். பேட்டியின் போது, நடிகர்கள் சந்திரஹாசன், ரமேஷ் அரவிந்த், திரைப்பட விநியோகஸ்தர் கங்கராஜு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments