Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

ஐக்கிய அமீரக இளவரசர் ஷேக் காலித் (Sheikh Khalid Bin Sultan Al Qasimi) லண்டனில் மரணம்

அரேபிய வளைகுடாவில் உள்ள ஒரு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நகரம் ஷார்ஜா. இதனை இளவரசர் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி ஆட்சி செய்து வருகிறார். இவர...

அரேபிய வளைகுடாவில் உள்ள ஒரு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நகரம் ஷார்ஜா. இதனை இளவரசர் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி ஆட்சி செய்து வருகிறார். இவரது மகன் ஷேக் காலித் பின் சுல்தான் அல் காசிமி (39), கடந்த 2008 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் காஸ்மி என்ற ஆண்கள் ஆடைகள் நிறுவனத்தை தொடங்கினார். அதன் முதன்மை கடை லண்டன் வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள சோஹோவில் இயங்கி வருகிறது. இந்நிலையில் அவர் நேற்று இறந்துவிட்டதாக ஐக்கிய அமீரகத்தின் ஆட்சியாளர் நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கும் நிலையில் நாட்டில் கொடிகள் அரை கம்பத்தில் பறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஷேக் காலித் மற்றும் அவருடைய குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக சமூகவலைத்தளத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. முன்னதாக சுல்தான் பின் முஹம்மதுவின் முதல் மகன் ஷேக் முகமது பின் சுல்தான் அல் காசிமி, 1999 இல் தன்னுடைய 24 வயதில் ஹெராயின் அளவுக்கதிகமாக பயன்படுத்தியதால் உயிரிழந்தார். கிழக்கு கிரின்ஸ்டெட்டில் உள்ள அவரது குளியலறையில் சிரிஞ்சுகள் கண்டெடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஷேக் காலித்தின் உடலை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு திருப்பி அனுப்புவது மற்றும் இறுதி அஞ்சலிக்கான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று ஷார்ஜாவின் ஆட்சியாளர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்