தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன் மகன் திருமணம்: அமைச்சர்கள் வாழ்த்து 21-05-2014 அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும்,...
தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன் மகன் திருமணம்: அமைச்சர்கள் வாழ்த்து
21-05-2014
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், தமிழ் நாடு வக்பு வாரிய தலைவரும், அ.தி.மு.க. ஆட்சி மன்ற குழு உறுப்பினருமான தமிழ்மகன் உசேனின் மகன் ஷா நவாஸ்– ரிஸ்வானா திருமணம் சென்னை ராயப்பேட்டையில் நடந்தது. திருமணத்தை தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது ஆயூப் நடத்தி வைத்தார்.
மணமக்களை அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், வளர்மதி, கோகுல இந்திரா, அவைத் தலைவர் மதுசூதனன், மேயர் சைதை துரைசாமி, கலைராஜன் எம்.எல்.ஏ., நடிகர்கள் சிவக்குமார், ராஜேஷ், ராமராஜன், ஆனந்தராஜ், லாரன்ஸ், குண்டு கல்யாணம், மன்சூர் அலிகான், சரவணன், நடிகை சச்சு, இசையமைப்பாளர் தேவா, சினிமா தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, தேனப்பன் மற்றும் தமிழ் நாடு விளையாட்டு சங்க பொதுச்செயலாளர் அய்யப்பன், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தொழில் அதிபர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் வாழ்த்தினார்கள்.
மணவிழாவுக்கு வந்தவர்களை மணமகன் பெற்றோர் தமிழ்மகன் உசேன், ஹயர் நிஷா, சகோதரர் இப்ராகிம், மணமகளின் பெற்றோர் இக்பால்–ரெஜினா ஆகியோர் வரவேற்றனர்.
No comments