நீண்டகால கோரிக்கையான நாகர்கோவில் வழியாக, கொச்சுவேளி - வேளாங்கண்ணி இடையே தினசரி இரவு நேர இரயிலை உடனடியாக இயக்கவேண்டும் என்ற கோரிக்கை நாளுக்...
நீண்டகால கோரிக்கையான நாகர்கோவில் வழியாக, கொச்சுவேளி - வேளாங்கண்ணி இடையே தினசரி இரவு நேர இரயிலை உடனடியாக இயக்கவேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள்
பயணிகளிடையே வலுத்து வருகிறது.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட இரயில் பயணிகள் கூறியதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம் இருபது லட்சம் மக்கள் தொகையை கொண்டு தமிழகத்திலேயே சென்னைக்கு அடுத்தபடியாக மக்கள் அடர்த்தி மிகுந்ததும், கிறிஸ்தவர்கள் அதிகமாகவும் அதற்கடுத்து இந்துக்களும், முஸ்லிம்களும் முறையே வசிக்கும் மாவட்டமுமாகும்.
இங்கிருந்து தினசரி ஏராளமான மக்கள் வேளாங்கண்ணிக்கு மதபேதமின்றி சென்று வருகின்றனர். இருந்தபோதிலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு நேரடி இரயில் வசதி இல்லாத காரணத்தால் பேருந்துகளிலும் தனியார் வாகனங்களிலும் செல்ல நேரிடுகிறது. அவ்வாறு செல்லும்போது பெண்கள், குழந்தைகள் மட்டுமின்றி குடும்பத்துடன் செல்பவர்களும் மிகவும் அவதியுறுகின்றனர். பல நேரங்களிலும் விபத்துக்கள் நேரிடுவதும் உண்டு.
திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்து ஏராளமான பயணிகள் வேளாங்கண்ணிக்கு மட்டுமல்ல திருவாரூர், காரைக்கால் மற்றும் அதன் சுற்றுவட்டார கிழக்கு, தென் கிழக்கு அதாவது நிடாமங்கலம், கீழ்வேளூர், திருத்துறைப்பூண்டி, வேளாங்கன்ணி, நாகூர், திருந்ளளார் போன்ற பகுதிகளுக்கு போகவேண்டும் என்றால் கூட, தென் பகுதியிலிருந்து செல்லும் மக்கள், பெண்கள், குழந்தைகள், என அனைவரும் அந்த்யோதயா அல்லது அனந்தபுரி விரைவு வண்டியில் பயணம் செய்து நடுநிசியில் தஞ்சாவூர் அல்லது திருச்சியில் இறங்கி காலை 6.20 மணி மட்டும் காத்து கிடக்க வேண்டிய அவல நிலை காலங்காலமாக நீடித்து கொண்டே இருக்கிறது.
கடந்த எட்டு வருடங்களாக கொச்சுவேளியில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு இரவு நேர தினசரி இரயில் இயக்கவேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட பயனாளிகள் மட்டுமல்லாது டெல்டா மாவட்ட பயணிகளும் கோரிக்கையை முன்வைக்கின்றனர், ஆனாலும் பயணிகளின் இந்த கோரிக்கையை இரயில்வே நிர்வாகம் கண்டுகொள்வதாக தெரியவில்லை.
ஆகவே பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, நாகர்கோவில் வழியாக கொச்சுவேளி - வேளாங்கண்ணி இரயிலை உடனடியாக இயக்க இரயில்வே நிர்வாகம் முன்வரவேண்டும் எனவும், அதற்கு மக்கள் பிரதிநிதிகள் இரயில்வே நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் எனவும் பயணிகள் விரும்புகின்றனர்.
No comments