கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தென்தாமரைகுளம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மகன் அஜித்குமார் (வயது 21). பாலிடெக்ன...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தென்தாமரைகுளம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மகன் அஜித்குமார் (வயது 21). பாலிடெக்னிக் முடித்து விட்டு படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் கட்டிட வேலைக்கு சென்று வந்தார். தற்போது இவர்கள் நாகர்கோவில் அருகே வண்டிகுடியிருப்பு பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்தனர்.
அவர்கள் வண்டிகுடியிருப்பில் இருந்து என்.ஜி.ஓ. காலனி நோக்கி கால்வாய் கரை வழியாக புறப்பட்டனர். நாகர்கோவில் அருகே சி.டி.எம்.புரம் பகுதியில் வந்த போது, எதிரே 3 மோட்டார் சைக்கிள்களில் ஒரு கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் வந்தனர். அவர்கள் இருவரையும் திடீரென வழிமறித்து நிறுத்தினர்.
உடனே, அஜித்குமாரும், அர்ஜூனும் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி தப்பி ஓட முயன்றனர். ஆனால் அந்த கும்பல் நண்பர்கள் இருவரையும் ஓட, ஓட விரட்டியது. பின்னர் அவர்களை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். தலை, கழுத்து, மார்பு உள்பட பல இடங்களில் வெட்டு விழுந்தது. இதனால் இருவரும் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர்.
இதற்கிடையே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்தனர். வெறிச்செயலில் ஈடுபட்ட கும்பல் பொதுமக்களை பார்த்ததும் அங்கிருந்து அவசர, அவசரமாக மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்று விட்டனர். சிறிது நேரத்தில் வெட்டு காயமடைந்த நண்பர்கள் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
இதையடுத்து போலீசார், பிணங்களை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள். கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் இருவரும் படுகொலை செய்யப்பட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. மேலும் இரட்டை கொலை குறித்து துப்பு துலக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments