மணவாளக்குறிச்சி போலீஸ் சரகம் சாத்தன்விளையை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மகன் செந்தில்குமார் (வயது 26), கூலித்தொழிலாளி. இன்னும் திருமணமாகவில...
மணவாளக்குறிச்சி போலீஸ் சரகம் சாத்தன்விளையை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மகன் செந்தில்குமார் (வயது 26), கூலித்தொழிலாளி. இன்னும் திருமணமாகவில்லை.
இவர் நேற்று மாலையில் சாத்தன்விளையில் இருந்து மோட்டார் சைக்கிளில் ராஜாக்கமங்கலம் நோக்கி புறப்பட்டார். அம்மாண்டிவிளை பிலாவிளை என்ற இடத்தில் வந்த போது அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் செந்தில்குமார் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு செந்தில்குமாரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.
இந்த விபத்து குறித்து மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் லாரியை ஓட்டி வந்த மகாதானபுரம் பாரதியார்தெரு பரமார்த்தலிங்கபுரத்தைச் சேர்ந்த ராஜலிங்கம் (43) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதற்கிடையே லாரி டிரைவர் ராஜலிங்கம் போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments