மத்திய அரசு வழங்கும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் கீழ் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மணவாளக்குறிச்சி பீச் ரோட்டில் அமைந்துள்ள சிஎஸ்சி மற்றும் ந...
மத்திய அரசு வழங்கும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் கீழ் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மணவாளக்குறிச்சி பீச் ரோட்டில் அமைந்துள்ள சிஎஸ்சி மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்ப்யூட்டர் எஜுகேஷன் அண்ட் டிஜிட்டல் டெக்னாலஜி பயிற்சி மையத்தில் வைத்து நடைபெற்று வருகிறது.

இந்த பயிற்சியில் சேர 15 வயது முதல் 60 வயது வரை உள்ள நபர்கள் தகுதியானவர்கள். பிசிசி (BCC) என அழைக்கப்படும் இலவச பயிற்சி ஒரு மாத காலம் நடைபெறும்.
நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கான முதற்கட்ட சான்றிதழ் பயிற்சி மையத்தில் வைத்து வழங்கப்பட்டது. சான்றிதழ் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. அதனால் சான்றிதழ் மிகவும் மதிப்பு வாய்ந்ததாகும்.

பயிற்சியை முடித்தவர்களுக்கான சான்றிதழை பயிற்சி நிலைய நிர்வாக இயக்குநர் முஹம்மது ராபி மற்றும் ஒருங்கிணைப்பாளரும், கம்ப்யூட்டர் ஆசிரியருமான எம்மெஸ் ஆகியோர் வழங்கினர்.
தற்போது புதிய வகுப்புகள் கொரோனா விதிமுறைகளுடன் நடைபெற்று வருகிறது. புதிதாக இலவச கம்ப்யூட்டர் பயிற்சியினை மேற்கொள்ள விரும்புபவர்கள் +91 9944840171 மற்றும் +91 9443403721 எண்களில் தொடர்பு கொள்ளவும்.
இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி இலவசமாக கம்ப்யூட்டர் பயிற்சியை பெற்றுகொள்ளவும்.
No comments