மணவாளக்குறிச்சி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் குளச்சல் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜே.ஜி. பிரின்ஸ் அவர்களால் தொகுதி நிதியில் இருந்து மாணவி...
மணவாளக்குறிச்சி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் குளச்சல் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜே.ஜி. பிரின்ஸ் அவர்களால் தொகுதி நிதியில் இருந்து மாணவிகள் அமர்ந்து படிக்கும் வகையில் பிரமாண்டமான மேற்கூரையுடன் கூடிய “ஷெட்” அமைப்படுகிறது.

இதற்கான பணிகளை குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ் நேற்று (19-12-2020) துவங்கி வைத்தார். இந்த பணிக்காக தனது தொகுதி நிதியில் இருந்து ரூ. 8 லட்சத்தை சட்டமன்ற உறுப்பினர் ஒதுக்கியுள்ளார்.

“ஷெட்” 100 அடி நீளமும், 20 அடி அகலத்திலும் மிக பிரமாண்டமாய் மாணவிகள் அமர்ந்து படிக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பெற்றோர் ஆசிரிய சங்கத் தலைவர் அன்பு கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments