மாற்றுத்திறனாளி மாணவனுக்கு அறுவை சிகிச்சைக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கிய குளச்சல் போலீஸ் ஏஎஸ்பி யின் மனிதாபிமானத்தை பாராட்டினர். கன்னியாகுமரி மாவ...
மாற்றுத்திறனாளி மாணவனுக்கு அறுவை சிகிச்சைக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கிய குளச்சல் போலீஸ் ஏஎஸ்பி யின் மனிதாபிமானத்தை பாராட்டினர்.

கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் சிஎஸ்ஐ போலியோ ஹோமில் தங்கி பயின்று வருபவர் கண்டவிளை பகுதியை சேர்ந்த மாணவர் ஆஷிக். மாற்றுத்திறனாளியான இவர் நடப்பதற்கு காலில் ஒரு அறுவை சிகிச்சை நடந்தது.
மேலும் இவர் பூரண குணம் அடைந்து முழுமையாக நடப்பதற்கு மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறினர்.
இந்த நிலையில் அந்த மாணவனின் ஏழ்மை நிலையை அறிந்த குளச்சல் போலீஸ் ஏஎஸ்பி விஸ்வேஸ் சாஸ்திரி அந்த மாணவனை நேரில் சென்று சந்தித்து அறுவை சிகிச்சைக்கான முழு பணத்தையும் தனது சொந்த செலவில் தருவதாக கூறினார்.
அதன்படி ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவனின் அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 50 ஆயிரத்தை மாணவனின் பாட்டியிடம் வழங்கினார்.
அவருடன் இரணியல் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் முத்துராஜ், சப் இன்ஸ்பெக்டர் சுந்தர் மூர்த்தி ஆகியோர் இருந்தனர்.
வாழ்த்துக்கள் சார்..!!
ReplyDelete