நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் திடீரென தலையில் பெட்ரோல் ஊற்றி தீ குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம...
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் திடீரென தலையில் பெட்ரோல் ஊற்றி தீ குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் ஆலங்கோட்டை புதூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (65) இவர் யோகி ராம் சுரத்குமார் அறக்கட்டளை முன்னாள் தலைவராக இருந்துள்ளார்.
இப்போதைய தலைவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக கூறி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தவர் திடீரென பெட்ரோல் ஊற்றி தீ குளிக்க முயன்றவரை நேசமணிநகர் போலீஸ் ஸ்டேஷன் பயிற்சி சப் இன்ஸ்பெக்டர் அருணாச்சலம், தனிப்பிரிவு தலைமை காவலர் கிருஷ்ணகுமார் ஆகியோர் தக்க சமயத்தில் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
No comments