மணவாளக்குறிச்சி அருகே மண்டைக்காடு புதூர் மீனவ பெண்களுக்கு மத்திய அரசின் சாகர் லெட்சுமி கடன் திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் விழா நடந்தது. ஒர...
மணவாளக்குறிச்சி அருகே மண்டைக்காடு புதூர் மீனவ பெண்களுக்கு மத்திய அரசின் சாகர் லெட்சுமி கடன் திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் விழா நடந்தது.

ஒருவருக்கு ரூ.35,000 வீதம் 128 பேருக்காக ரூ.44,80,000 வழங்கப்பட்டது. விழாவிற்கு மணவாளக்குறிச்சி ஐ.ஓ.பி. வங்கி மேலாளர் ராஜீவ் தலைமை தாங்கினார். உதவி மேலாளர்கள் பிரின்ஸ் மற்றும் ஷாமிலி முன்னிலை வகித்தனர்.
அரசு வழக்கறிஞர் ஞானசேகர் மிடாலம் பஞ்., தலைவர் விஜயகுமார் வாழ்த்தி பேசினர். விஜயகுமார் எம்.பி. கடன் உத்தரவை வழங்கினார். சிவா, ஆன்றனி மற்றும் துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
















No comments