மணவாளக்குறிச்சியில் நேற்று மாலை வேளையில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. திடீரென சுகாதாரத்துறை பணியாளர்கள், போலீசார் சந்திப்பு பகுதியை சூழ்ந்ததால...
மணவாளக்குறிச்சியில் நேற்று மாலை வேளையில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. திடீரென சுகாதாரத்துறை பணியாளர்கள், போலீசார் சந்திப்பு பகுதியை சூழ்ந்ததால் மக்கள் அச்சத்துடன் பரபரப்பானார்கள்.

சிலநாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டபெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த பெண் நாடோடி சமூகமாக வாழும் குழுவை சேர்ந்தவராக தெரிகிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அந்த பெண், திடீரென அங்கிருந்து மாயமானார். இதனால் அவர், தப்பியோடியதாக தெரிந்தது.
இந்நிலையில் தப்பியோடியவரை பிடிக்க பணியாளர்கள் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்நிலையில் அந்த பெண், அவர்களின் குழுவினருடன் மணவாளக்குறிச்சி பகுதியில் இருப்பதாக தகவல் தெரிந்தது.

உடனே, போலீசார் உதவியுடன், பணியாளர்கள் விரைந்து வந்து, கொரோனா பாதித்தவரை வாகனத்தில் ஏற்ற முற்பட்டனர். ஆனால் அந்த பெண்மணி வாகனத்தில் ஏற மறுத்ததுடன், அவர்களின் குழுவினரும் அவரை ஏற விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து எடுக்கப்பட்ட முயற்சிகளின் பயனாக, அந்த பெண்ணை ஒருவழியாக வாகனத்தில் ஏற்றினர். இதனால் அந்த பகுதி மிகவும் பரபரப்புடன் காணப்பட்டது.
மாலை வேளை என்பதால், மக்கள் அதிக அளவில் கூடினர். அவரை மீண்டும் மருத்துவமனையில் சேர்த்ததால், பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.
போட்டோஸ்
டைசன், மணவாளக்குறிச்சி
No comments