1980-ம் ஆண்டு இந்து முன்னணி அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக இருந்து வந்தவர் இராம கோபாலன் (வயது 94). இவர் கடந்த 26 ஆம் தேதி மாலை திடீரென மூச்...
1980-ம் ஆண்டு இந்து முன்னணி அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக இருந்து வந்தவர் இராம கோபாலன் (வயது 94). இவர் கடந்த 26 ஆம் தேதி மாலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து போரூரில் உள்ள ராமச்சந்திரா தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் அவருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது.
இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி இராம கோபாலன் மரணம் அடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த நிலையில், பின்னர் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆகஸ்டு மாதமும் இராம கோபாலன் மூச்சுத்திணறல் காரணமாக இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருந்தார். அவரது மறைவுக்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மணவாளக்குறிச்சி பகுதியில் இந்து முண்ணனி நிறுவன தலைவர் வீரத்துறவி இராம. கோபாலன் ஜிக்கு மணவாளக்குறிச்சி ஜங்சன் மற்றும் வடக்கன்பாகம் ஊரில் வீரவணக்க புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்து இயக்கத்தினர் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
No comments