மத்திய பிரதேசம் போபாலில் பிறந்து இரண்டே நாட்களான பெண் குழந்தையை 100 முறைக்கும்மேல் ஸ்க்ரூ ட்ரைவரால் குத்தி, ஒரு துப்பட்டாவில் சுற்றி கோவிலில...
மத்திய பிரதேசம் போபாலில் பிறந்து இரண்டே நாட்களான பெண் குழந்தையை 100 முறைக்கும்மேல் ஸ்க்ரூ ட்ரைவரால் குத்தி, ஒரு துப்பட்டாவில் சுற்றி கோவிலில் வீசி சென்றிருக்கின்றனர்.

அயோத்யா நகரில் நடந்த இந்த சம்பவத்தில், ரத்தவெள்ளத்தில் குழந்தை மிதந்தை கண்ட மக்கள் அளித்த தகவலின்பேரில் அங்கு விரைந்த போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டனர். மேலும் அக்குழந்தை குறித்து விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து இதுகுறித்து போலீஸ் அதிகாரி ரேணு முராப் கூறுகையில், கடந்த 24ஆம் தேதி யாரோ குழந்தையை துப்பட்டாவில் சுற்றி போட்டிருக்கிறார்கள் என்று நினைத்தோம். ஆனால் விரித்துப் பார்த்த எங்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
குழந்தையின் உடல்முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இரவில் யாரோ குழந்தையை விட்டுச்சென்றதால் மிருகம் தாக்கியிருப்பதாக நினைத்தோம். ஆனால் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியதில், ஸ்க்ரூட்ரைவரால் அந்த குழந்தையை 100 தடவைக்கும் மேல் குத்தியிருப்பது தெளிவாக தெரியவந்தது என அவர் கூறினார்.
குழந்தை வீசப்பட்டிருந்த கோவிலுக்கு அருகே உள்ள சிசிடிவி கேமிராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மத்திய பிரதேசத்தில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இதுவரை 3 பெண் குழந்தைகள் கொலைசெய்யப்பட்டுள்ளனர்.
No comments