முதலில், சாதாரண டிவி நிறுவனமாக சாம்சங் நிWவனம் தொடங்கப்பட்டது. அதன் பின் வீடுகளுக்குத் தேவையான மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனமாக லீ ...
முதலில், சாதாரண டிவி நிறுவனமாக சாம்சங் நிWவனம் தொடங்கப்பட்டது. அதன் பின் வீடுகளுக்குத் தேவையான மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனமாக லீ யங் சல் நடத்தி வந்தார். அவரது மறைவுக்குப் பின்,1987-ம் ஆண்டு மகனான லீ குன் ஹீ(78) நிறுவனத்தை ஏற்று நடத்தத் தொடங்கினார். 1993ல் இருந்து சாம்சங் நிறுவனம் பல வகைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்தார் லீ குன் ஹீ.

அதன்பின் உலகின் தலைசிறந்த மின்னணு நிறுவனமாக சாம்சங்கை லீ குன் உயர்த்தினார். தற்போது சாம்சங் நிறுவனத்தில் ஸ்மார்ட்போன், டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், மெமரி சிப் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் சாம்சங் நிறுவனத்தில் வாங்க முடியும்.
இது தென்கொரியாவில், மிகப்பெரிய மின்னணு நிறுவனமாக உள்ளது. ஆசியாவில் நான்காவது மிகப்பெரிய மின்னணு நிறுவனமாக சாம்சங் உள்ளது.
இந்நிலையில், இன்று லீ குன் ஹீ காலமானார். இது குறித்து சாம்சங் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் "சாம்சங் நிறுவனத்தின் அதிபர் லீ குன் ஹீ அக்டோபர் 25-ம் தேதி காலமானார். அவரது உயிரிழப்பை குடும்ப உறுப்பினர்கள் உறுதி செய்துள்ளனர். லீ குன் நினைவுகளை சாம்சங் நிறுவனத்தில் அனைவரும் நினைவுகூர்கிறோம்." என்று தெரிவித்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டில் லீ குன் முதலில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அப்போதிலிருந்து அவரது மகன் மற்றும் சகோதரர்கள் நிறுவனத்தைக் கவனித்து வந்துள்ளனர்.
No comments