நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கணவனும், மனைவியும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட...
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கணவனும், மனைவியும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்திற்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்களுடைய தேவைகளுக்காக கலெக்டரிடம் மனு கொடுத்து விட்டு தீர்வு பெற்று வருகின்றனர்.
இதனால் கலெக்டர் அலுவலகம் செயல்பட கூடிய நாட்களில் எல்லாம் மனுக்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக இங்கு மனுக்கள் கொடுக்க வருபவர்கள் மறைத்து கொண்டு வரும் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைக்க முயற்சிகள் எடுப்பவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசார் காப்பாற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கின்றனர்.
கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வருபவர்கள் உடலில் தீ வைக்க முயற்சிகள் செய்யும் சம்பவங்களை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உள்ளே செல்பவர்களை போலீசார் சோதனை செய்தே அனுப்புகின்றனர். இந்நிலையில் ஆசாரிப்பள்ளம் அருகே உள்ள மேலபெருவிளை வடக்கு ஆற்றங்கரை பகுதியை சேர்ந்த தாமராச்சி (65), முத்துசாமி (67) இவர்கள் இருவரும் கணவன், மனைவியாகும். இந்த தம்பதியினர் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தது போல் கலெக்டர் அலுவலகம் வந்தனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் வந்தவர்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைக்க முயற்சி செய்தனர். இதை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் ஓடிவந்து காப்பாற்றினர்.
இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தம்பதியினர் வைத்திருந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, நாங்கள் வசித்து வரும் இடத்தை வாங்கி வீடு வைத்தது
இது தொடர்பாக அலெக்ஸ் செல்வ டேவிட் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 15 ஆண்டுகளாக எங்களை தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்து பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்தி பொருட்களை சேதப்படுத்தி வேதனைப்படுத்தி வருகின்றனர். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
No comments