குமரி மாவட்டத்தில் கட்டுப்பாட்டு வளைய பகுதிகள் 14 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பாதிப்பு உருதியானவர்களின் ஊர்களில், வீடு, வீடாக சுகாதாரத்துறை அ...
குமரி மாவட்டத்தில் கட்டுப்பாட்டு வளைய பகுதிகள் 14 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பாதிப்பு உருதியானவர்களின் ஊர்களில், வீடு, வீடாக சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

குமரியில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 6300 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். இதில் 25 பேருக்கு பாதிப்பு உள்ளது.
4,910 பேருக்கு கொரோனா நோய் தொற்று இல்லை. மீதமுள்ள நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்டத்தில் ஏற்கனவே நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளை, டென்னிசன்ரோடு ஆகிய பகுதிகள் சீல் வைக்கப்பட்டு இருந்தன.
பின்னர் தளவாய்புரம், வெட்டூர்ணிமடத்தில் கேசவ திருப்பாபுரம், தேங்காய்பட்டணம் தோப்பு, மணிகட்டிபொட்டல், குலேசேகரம் செறுதிகோணம் பகுதிகள் சீல் வைக்கப்பட்டன. குளச்சல், காரக்கோணம், சுங்காங்கடை திருமலைநகர், மார்த்தாண்டம் விரிகோடு, தென்தாமரைகுளம் போலீஸ் ஸ்டேஷன் ரோடு ஆகிய பகுதிகளும் சீல் வைக்கப்பட்டு உள்ளது.
மொத்தம் 12 பகுதிகள் சீல்வைக்கப்பட்ட பகுதியாக இருந்த நிலையில் நேற்று, மயிலாடி, பாம்பன்விளை, மார்த்தாண்டம் நல்லூர் ஆகிய பகுதிகள் சீல் வைக்கப்பட்டன. இதனால் சீல் வைக்கப்பட்ட பகுதிகள் 15 ஆக உயர்ந்த நிலையில், தேங்காய்பட்டணம் தோப்பு கட்டுப்பாடு வளைய பகுதியில் இருந்து நீக்கப்பட்டது. இதனால் தற்போது 14 பகுதிகள் கட்டுப்பாடு வளைய பகுதிகளாக உள்ளன.
இதில் நேற்று நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் பகுதியான நல்லூர், மயிலாடி, பாம்பன்விளை ஆகிய பகுதிகளில் இன்று காலை முதல் சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடுவீடாக ஆய்வு செய்து, யார்யாருக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்புகள் உள்ளது? என கணக்கெடுத்து வருகின்றனர். அந்த பகுதிகளில் எவ்வளவு வீடுகள், மக்கள்தொகை எவ்வளவு என்பது குறித்த ஆய்வையும் மேற்கொள்கின்றனர்.
No comments