மத்திய அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கு உத்தரவால் மக்களின் வாழ்வாதாரம் முடக்கப்பட்டு உள்ளதாகவும், மத்திய அரசு சிறுபான்மையினருக்கு எதிரான நடவட...
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கு உத்தரவால் மக்களின் வாழ்வாதாரம் முடக்கப்பட்டு உள்ளதாகவும், மத்திய அரசு சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மாவட்டம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகர்கோவிலில் இடலாக்குடி, இளங்கடை, தக்கலை, குளச்சல், மணவாளக்குறிச்சி, மாதவலாயம் உள்பட 14 இடங்களில் ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமூக இடைவெளியுடன் குடை பிடித்தபடி, முக கவசம் அணிந்து கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. எனவே தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.

மணவாளக்குறிச்சியில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட பொதுசெயலாளர் மணவை சாதிக் அலி சிறப்பு அழைப்பாளராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். “ஊரடங்கு என்பது வாய்மூடி இருப்பதர்கல்ல” கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களை வஞ்சிக்கப்படுவதை கண்டித்தும், குடைகளை பிடித்தபடி, சமூக இடைவெளிவிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மணவாளக்குறிச்சி கிளை செயாளர் அஸீம் தலைமையில் நடைபெற்றது. கிளை துணைத்தலைவர் அய்யூப்கான், அர்ஷாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்ட முடிவில் அனைவரும் கைது செய்யப்பட்டனர். மாலை 6 மணி அளவில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
No comments