மார்த்தாண்டம் அருகே நல்லூர் நடுவிளையை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 49). இவருடைய மனைவி கீதா (45). இவர்களுடைய மகன் அபினேஷ் (18), மகள் அபிநயா (14)...
மார்த்தாண்டம் அருகே நல்லூர் நடுவிளையை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 49). இவருடைய மனைவி கீதா (45). இவர்களுடைய மகன் அபினேஷ் (18), மகள் அபிநயா (14). இடைக்கோட்டில் உள்ள தனியார் பள்ளியில் அபினேஷ் 11-ம் வகுப்பும், அபிநயா 9-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

ஜார்ஜ் மிசோரமில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். விடுமுறைக்காக ஊருக்கு வந்த அவர் ஊரடங்கு அமலில் உள்ளதால் மிசோரமுக்கு செல்ல முடியவில்லை. இதனால் வீட்டில் பிள்ளைகள், மனைவியுடன் பொழுதை கழித்து வந்தார்.
இந்நிலையில் மோட்டார் சைக்கிள் வாங்கி தரும்படி அபினேஷ், தன்னுடைய பெற்றோரிடம் கூறியுள்ளார். ஊரடங்கு தற்போது உள்ளதால் மோட்டார் சைக்கிள் வாங்க முடியாத நிலை உள்ளது என்று பெற்றோர் தெரிவித்துள்ளனர். இது அபினேசுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. இதனால் மனமுடைந்த அவர் சிறிது நேரம் கழித்த பிறகு வீட்டில் வைத்து விஷம் குடித்து விட்டார்.
உடனே பெற்றோர் பதறியடித்தபடி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அபினேஷை மீட்டு சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
அபினேஷ் சாவதற்கு முன்பு டிக்-டாக்கில் சோகமான பாடலை பாடியபடி வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அந்த வகையில், சுமார் 1 மணி நேரத்தை செலவழித்துள்ளார். அதன் பிறகு தான் அவர் தன்னுடைய உயிரை மாய்த்து கொண்டதாக மார்த்தாண்டம் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் மோட்டார் சைக்கிள் வாங்கி தராததால் மாணவன் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
















No comments