மணவாளக்குறிச்சி பகுதியில் ஆடுகளை மர்ம விலங்கு கடித்து குதறிய சம்பவம், அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா ஊரடங்கா...
மணவாளக்குறிச்சி பகுதியில் ஆடுகளை மர்ம விலங்கு கடித்து குதறிய சம்பவம், அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் சில இடங்களில் விலங்குகள் ஊருக்குள் வந்து எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் உற்சாகமாக சுற்றிவருவதை காணமுடிகிறது.
இந்நிலையில் மணவாளக்குறிச்சி பகுதியில் மர்ம விலங்கு ஒன்று ஊருக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறிய சம்பவம் நடந்துள்ளது.
மணவாளக்குறிச்சி, பிள்ளையார்கோவில் பகுதியை சேர்ந்தவர் சிலுவைமுத்து (வயது 63). கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் 2 ஆடுகள் வளர்த்து வந்தார். ஆடுகளை வீட்டின் அருகில் கட்டுவது வழக்கம்.

நேற்று முன்தினம் காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டில் கட்டப்பட்டு இருந்த இடத்தில் 2 ஆடுகளும் ஏதோ ஒரு மர்ம விலங்கு கடித்து குதறப்பட்டு இறந்த நிலையில் காணப்பட்டது. இதை பார்த்து சிலுவைமுத்து அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் வேளிமலை வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர்.

இதையடுத்து வனத்துறையினர் மர்ம விலங்கின் கால்தடத்தை பதிவு செய்தனர். இதனை ஆய்வு செய்த பின்னர்தான், ஆடுகளை கடித்தது எந்த விலங்கு என தெரியவரும் என தெரிவித்தனர்.
இதற்கிடையே மணவாளக்குறிச்சி ஆண்டார்விளை பகுதியை சேர்ந்த ஒருவர் வீட்டில் நேற்று இரவு வான்கோழியை மர்ம விலங்கு கடித்து கொன்றுள்ளது. இந்த சம்பவத்தால் மணவாளக்குறிச்சி மக்களிடையே அச்சம் காணப்படுகிறது.
No comments