Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக குமரி மாவட்டத்தில் 15 இடங்களில் தவ்ஹீத் ஜமாத் போராட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்டவற்றை திரும்ப பெற வலியுறுத்தி முஸ்லிம் அமைப்புகள்...

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்டவற்றை திரும்ப பெற வலியுறுத்தி முஸ்லிம் அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சிகள் ஆகியவற்றின் சார்பில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம், தர்ணா போராட்டம், பேரணி போன்றவை நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோல் தமிழகத்திலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேட்டை திரும்ப பெற வலியுறுத்தி தர்ணா போராட்டங்கள் நடைபெற்றது. நாகர்கோவில் டவுன் மற்றும் கோட்டார் கிளைகள் சார்பில் இளங்கடை பாவாகாசிம் திடலில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தர்ணா போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு கோட்டார் கிளை தலைவர் ‌‌ஷகாப்தீன் தலைமை தாங்கினார். மேலப்பாளையத்தைச் சேர்ந்த பேச்சாளர் சித்தீக், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட துணைத்தலைவர் உசேன் ஜவாஹிரி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். போராட்டத்தில் ஆண்கள், பெண்கள், சிறுவர்- சிறுமிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆனாலும் ஆண்களைவிட பெண்கள்தான் அதிக அளவில் பங்கேற்றனர். கலந்து கொண்டவர்கள் அனைவரும் தேசியக்கொடி வடிவிலான பேட்ஜ் அணிந்திருந்தனர்.
குமரி மாவட்டம் முழுவதும் 15 இடங்களில் தர்ணா போராட்டம் நடந்தது. இதில் ஆண்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாவட்ட துணைச்செயலாளர் உசேன் ஜவாஹிரி தெரிவித்தார்.

இதேபோல் குளச்சலில் காமராஜர் பஸ்நிலையம் முன்பு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு நகர தலைவர் அப்துல் ராசித் தலைமை தாங்கினார். மாவட்ட பேச்சாளர் அன்வர் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் முகமது ஆசிக், அப்துல் பாசித், ஆசிக் ரகுமான் உள்பட ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர். போராட்டத்தையொட்டி குளச்சல், இலப்பைவிளை, பள்ளிரோடு ஆகிய பகுதிகளில் உள்ள முஸ்லிம் வீடுகளில் கருப்பு கொடிகள் கட்டப்பட்டு இருந்தன.
திங்கள்சந்தை பகுதியில் உள்ள பள்ளிவாசல் அருகில் குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆளூர் சந்திப்பிலும் தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

கன்னியாகுமரி முஸ்லிம் தெருவில் நடந்த போராட்டத்திற்கு கிளை தலைவர் அபுபக்கர் சித்திக் தலைமை தாங்கினார். மாநில பேச்சாளர்கள் இப்ராகிம், பதூர் அலி ஆகியோர் குடியுரிமை திருத்த சட்டத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து பேசினார்கள்.
மந்தாரம்புதூரில் நடந்த போராட்டத்திற்கு தவ்ஹீத் ஜமாத் கிளை செயலாளர் முகமது செரீப், ரசீப் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த போராட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடந்தது. இந்த 2 இடங்களிலும் நடந்த போராட்டங்களில் ஏராளமான முஸ்லிம்களும் பங்கேற்றனர். போராட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

களியக்காவிளை பஸ் நிலையம் முன்பு நடந்த தர்ணா போராட்டத்துக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் களியக்காவிளை பகுதி தலைவர் சுராபல்சலீம் தலைமை தாங்கினார். செயலாளர் அப்துல் மனாஸ் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர் கியாசுதீன் போராட்டத்தை விளக்கி பேசினார். இதில், மாணவ-மாணவிகள், பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திட்டுவிளை பஸ் நிலையம் முன்பு நடந்த தர்ணா போராட்டத்துக்கு தவ்ஹீத் ஜமாத் திட்டுவிளை கிளை தலைவர் ஜகபர் சாதிக் தலைமை தாங்கினார். அப்துல் லத்தீப், கிளை பொருளாளர் அஸ்ரப் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் நபில் அகமத் உள்பட பலர் போராட்டத்தை விளக்கி பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்