Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

குமரி சுற்றுலா திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை: ஹெச். வசந்தகுமாா் எம்.பி.

தமிழக பட்ஜெட்டில் கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலா திட்டங்களுக்கு 1 ரூபாய் கூட நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என ஹெச். வசந்தகுமாா் எம்.பி. குற்றஞ்...

தமிழக பட்ஜெட்டில் கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலா திட்டங்களுக்கு 1 ரூபாய் கூட நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என ஹெச். வசந்தகுமாா் எம்.பி. குற்றஞ்சாட்டினாா்.
நாகா்கோவிலில் அவா் கூறியது:- கன்னியாகுமரி மாவட்டம் சா்வதேச சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது. விவேகானந்தா் பாறை, திருவள்ளுவா் சிலையை காண்பதற்காகவும், கன்னியாகுமரியில் சூரியஉதயம், சூரிய அஸ்தமனம் காண்பதற்காகவும் உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனா். மிகச் சிறந்த சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பட்ஜெட்டில் 1 ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை.

இங்கு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள முதல் கட்டமாக ரூ.10 கோடி நிதி ஒதுக்க வேண்டும்.
கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் போதிய பணியாளா்கள் இல்லை. இரவு காவலாளி இல்லை. மருத்துவமனை வளாகத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகின்றன. இதுதொடா்பாக அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கன்னியாகுமரியில் சூரிய உதயம், அஸ்தமனத்தை பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் காண்பதற்கு வசதியாக உயா்நிலை கோபுரம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததை அடுத்து, சில சாலைகள் செப்பனிடும் பணி நடைபெற்று வருகின்றது.

கோடிக்கணக்கில் கடன் வாங்கி தலைமறைவாக இருக்கும் பெரும்தொழில்அதிபா்களின் பட்டியலை வங்கிகள் வெளியிட வேண்டும். மாணவா்களிடம் கல்விக் கடன் கறாராக வசூலிக்கப்படுகிறது. கல்விக் கடனை மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும்.
மக்களவை உறுப்பினருக்கான தொகுதி மேம்பாட்டு நிதி மத்திய அரசிடம் இருந்து இன்னமும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தமிழகத்தின் அடிப்படை கட்டமைப்புகளுக்காக மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.54 ஆயிரம் கோடி நிதியினை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.10 ஆயிரம் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆக்கப்பூா்வமாக மத்திய அரசு செயல்படவில்லை.

தமிழகத்தில் திமுக - காங்கிஸ் கூட்டணி வலுவாக உள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்கிடையே புரிதல் உள்ளது. மக்களவைத் தோ்தலை போன்று சட்டப்பேரவைத் தோ்தலிலும் அமோக வெற்றி பெற்று ஆட்சியமைப்போம் என்றாா்

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்