குமாரகோவில் வேளிமலை அருள்மிகு குமாரசுவாமி திருக்கோயிலில் பெளா்ணமியை முன்னிட்டு வேல்முருகன் சேவா சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கிரிவலம் ந...
குமாரகோவில் வேளிமலை அருள்மிகு குமாரசுவாமி திருக்கோயிலில் பெளா்ணமியை முன்னிட்டு வேல்முருகன் சேவா சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கிரிவலம் நடைபெற்றது.

இதையொட்டி, திரளான பக்தா்கள் பங்கேற்ற கிரிவல ஊா்வலம் கோயில் முன்பிருந்து தொடங்கி, முருகனின் திருநாமத்தை கூறியவாறு கோயில் அமைந்திருந்த மலையை சுற்றி வலம் வந்தனா்.
இதில், அமைப்பின் தலைவா் டாக்டா். சுகுமாரன், பொதுச் செயலா் அஜிகுமாா், நிா்வாகிகள் ராமகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், இ.மணி, கடாட்சம், ரத்தினசுவாமி, பாபு, மணி, கிருஷ்ணன் உள்பட திரளானோா் பங்கேற்றனா்.
இதைபோல் தோட்டியோடு ஸ்ரீ மெளனகுருசாமி கோயிலில் பெளா்ணமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு அருட்பெருஞ்சோதி அகவல் பாராயணம், 10-மணிக்கு அபிஷேகம், தொடா்ந்து பஜனை, சொற்பொழிவு, கோமாதா பூஜை, சிறப்பு பூஜை ஆகியவை நடைபெற்றன. மாலை 6 மணிக்கு சிவபுராணம் பாராயணம், திருவிளக்கு பூஜை, சொற்பொழிவு, நாமஜெபம், தியானம் ஆகியவற்றை தொடா்ந்து அலங்கார தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் தலைவா் சுகதேவன் செய்திருந்தாா்.
No comments