Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

குளச்சலில் மக்கள் நடமாடும் பகுதியில் பேய்கள் உலாவருகிறதா? நெஞ்சை பதறவைக்கும் செய்தி

நமது தளத்தில் (மணவை இன்ஃபோ) 29-05-2013 அன்று வெளியிடப்பட்டது இந்த செய்தி. மீண்டும் ஒரு முறை நமது பார்வைக்காக வெளியிடப்படுகிறது. இந்த செய்த...

நமது தளத்தில் (மணவை இன்ஃபோ) 29-05-2013 அன்று வெளியிடப்பட்டது இந்த செய்தி. மீண்டும் ஒரு முறை நமது பார்வைக்காக வெளியிடப்படுகிறது. இந்த செய்தி உண்மையா அல்லது பொய்யா என நமக்கு சந்தேகம் ஏற்பட்டாலும், செய்தியில் இணைக்கப்பட்டுள்ள போட்டோவை எடுத்த குளச்சல் பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவர் உண்மை என்று அடித்து கூறினார். செய்தி மீண்டும் உங்கள் பார்வைக்கு...
‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்று கூறுவர். ஆனாலும் பேய்கள் பற்றிய பயம் காலம் காலமாக மக்களை கிலியடையத்தான் செய்கிறது. இன்று அநேக மக்களை இரவு நேரத்தில் பயங்கொள்ள செய்வது பேய்கள் பற்றிய பயம் தான்.

டெக்னாலஜியின் உச்சத்தில் இருக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட பேய்கள் பற்றிய பயம் இருக்கத்தான் செய்கிறது. பேய்கள் பற்றிய ஏராளமான ஆங்கில சினிமாக்களும் வந்து கொண்டுதான் இருக்கிறது. மக்களும் அதுமாதிரியான சினிமாக்களை ஒருவித பயத்தோடு பார்த்து பரவசமடைகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், அண்ணா சிலை சந்திப்பு அருகில் ஒரு மேல்நிலை பள்ளி உள்ளது. அந்த பள்ளியின் பின் பகுதியில் பி.ஜெகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழில்நுட்ப படிப்பு படித்துள்ளார். இவர் தன்னிடம் கேமரா இணைந்துள்ள ஒரு செல்போன் வைத்துள்ளார்.

இவர் சிலவேளைகளில் விளையாட்டாக பார்ப்பதையெல்லாம் செல்போன் கேமராவில் படம் எடுப்பார். இந்நிலையில் கடந்த 14-05-2013 அன்று இரவு 08.20 மணியளவில் ஜெகன் தன்னுடைய வீட்டிற்கு செல்லும்போது தெருவில் உள்ள தெருவிளக்குகளை படம் பிடித்தவாறு சென்றுள்ளார்.
மறுநாள் தன் செல்போனில் தான் எடுத்த படங்களை பார்வையிட்டுள்ளார். அப்போது, முன்தினம் இரவு எடுத்த படத்தையும் பார்த்துள்ளார். அதில் தெருவிளக்கை எடுத்த படத்தின் வலது ஓர மேற்பகுதியில் ஏதோ வெள்ளையாக ஒரு உருவம் தெரிந்தது. அது பார்ப்பதற்கு ஒரு பெண் போன்ற உருவம் தெரிந்ததால், அப்படத்தை கம்ப்யூட்டரில் இணைத்து பார்த்துள்ளார்.

படத்தை பார்த்தவர் மிகவும் பயந்துள்ளார். அந்த படத்தில் தலை விரித்த நிலையில் வெள்ளை துணியோடு கண்ணை உருட்டிய நிலையில் ஒரு உருவம் தெரிந்தது. அது பார்ப்பதற்கு பேய் போன்றதாக இருந்தது. உடனே இதுபற்றி ஜெகன் தன் நண்பர்களிடம் கூறியுள்ளார். அவர்களும் பார்த்தவுடன் பேய் என்று கூறியுள்ளனர்.

தற்போது ஜெகன் பயந்த நிலையில் தன்னுடைய வீட்டை விட்டு இரவு 7 மணிக்கு மேல் வெளியே வருவதில்லை. மேலும் அவர் பகல்வேளையில் அந்த தெருவிளக்கை கடந்து செல்லும்போது ஒருவித அச்சத்துடன் செல்கிறார். அவர் எடுத்த படமும் உங்கள் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை நீங்கள் சேமிக்கும் போது, அந்த பைல் நேமில், அவர் எடுத்த போட்டோவின் நாள் மற்றும் நேரம் இருப்பதை காணலாம். இது உண்மையா? இல்லையா? என்பது உங்கள் பார்வைக்கே இடப்படுகிறது.

இந்த போட்டோவை எடுத்த ஜெகனிடம் நாம் இதுகுறித்து தொலைபேசியில் கேட்டபோது:-
போட்டோவை நான் தான் எடுத்தேன். போட்டோவை பார்த்து நான் பயந்து விட்டேன். போட்டோவை நாகர்கோவிலுள்ள ஒரு போட்டோ ஸ்டுடியோவில் கொண்டு சென்றேன். அவர்கள் இந்த போட்டோவை பார்த்து விட்டு, இந்த போட்டோ உண்மையில் நீங்கள் தான் எடுத்ததா? என்று ஆச்சரியத்துடன் கேட்டார். மேலும் போட்டோவில் எடிட் எதுவும் செய்யவில்லை எனவும் கூறினார்.

போட்டோவில் தெரியும் தெருவிளக்கு வட்டவடிவில் தெரிவதாக சிலர் கூறினர். சற்று தொலைவில் இருந்து எடுக்கும் போது தெருவிளக்கு இவ்வாறுதான் தெரிகிறது எனக்கூறிய ஜெகன், நீங்கள் சந்தேகப்படுவதாக இருந்தால், இன்று இரவு எங்கள் ஊருக்கு வந்து மேற்படி, தெருவிளக்கை போட்டோ எடுங்கள். ஆனால் நீங்கள் போட்டோ எடுக்கும் போது அந்த உருவம் தெரிகிறதா? இல்லையா? என எனக்கு தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.
செய்தி மற்றும் போட்டோ
சுரேஷ்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்