குமரி மாவட்டத்தில் சிப்பி மீன் சீசன் துவங்கியுள்ளது. குளச்சலில் சிப்பி மீன் விலையும் சரிந்துள்ளது. குமரி மாவட்டத்தில் குளச்சல், முட்டம...
குமரி மாவட்டத்தில் சிப்பி மீன் சீசன் துவங்கியுள்ளது. குளச்சலில் சிப்பி மீன் விலையும் சரிந்துள்ளது.
குமரி மாவட்டத்தில் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம், கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர கிராமங்களில் சுமார் 8 ஆயிரம் படகுகளும், 15 ஆயிரம் பைபர் வள்ளங்களும் மீன்படி தொழிலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதில் விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிக்கு சென்று 10 நாட்கள்வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில் மட்டுமே சுறா, கேரை, கணவாய், புல்லன் உள்ளிட்ட உயர்ரக மீன்கள் கிடைக்கிறது.
சிப்பி மீன் சீசன் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை இருக்கும். சிப்பி மீன்கள் குளச்சல், கொட்டில்பாடு, சைமன் காலனி, கோடிமுனை, வாணியக்குடி, கடியப்பட்டணம் குறும்பனை, இனயம் ஆகிய மீனவ கிராமங்களில் மட்டுமே அதிகஅளவில் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சிப்பிகளுக்கு கேரளாவில் அதிக மவுசு இருப்பதால், கேரளா வியாபாரிகள் போட்டிபோட்டு வாங்கி செல்கிறார்கள். குளச்சலில் முதலில் 1000 எண்ணம் கொண்ட சிப்பி மீன் 2000 ரூபாய்க்கு விலை போனது. ஆனால் நேற்று 1000 எண்ணம் 1000 ரூபாய்க்கு தான் விலை போனது.
No comments